யோகங்களின் வகைகள்- குரு சௌந்தர்
அன்புடையீர்
குருஜி அவர்களின் விளக்கத்தை படித்தேன். தெள்ளத் தெளிவான விளக்கம். அவருக்கு என் நன்றிகள். நான் தொய்வின்றி குருஜி கற்றுக்கொடுத்த யோகப்பயிற்சியையும் திரு. அமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா பயிற்சியையும் செய்து வருகிறேன். நான் யோக நித்ரா மற்றும் விபாசனா பயிற்சி செயல்முறை ஒன்றுபோல் தெரிகிறதென ஐயம்தான் தெரிவிக்க விரும்பினேன்.சரியான சொற்களை இடாததால் தவறான பொருள் வந்துவிட்டது. வருந்துகிறேன்.
மேலும் இரு பயிற்சிகளின் முடிவான நோக்கத்தையும் நன்கு புரிந்துள்ளேன். பயிற்சிகளின் பலனையும் அடைகின்றேன். குருஜி கூறியதுபோல் கவன மின்மையால் பேசப்பட்ட விசயங்களை நான் தவறவிட்டிருக்கலாம். தியான வகுப்பிலும் கலந்து கொள்ள வேண்டும் ஆர்வத்தினால்தான் எனது ஐயத்தை கேட்டேன். யாவும் ஒன்றே எனக் கூற முனையவில்லை. அவ்வாறு கூறவும் மாட்டேன்.
அன்புடன், சிவநாத்.