கார்ல் பாப்பர், கடிதம்

ஆசிரியருக்கு,

கார்ல் பாப்பர் அவர்களின் The logic of Scinetific inquiry புத்தகத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.இது ஒரு Text book.பாடப்புத்தகம்.பழைய அறிவியல் காலத்தை அரிஸ்டாட்டில் முதல் பிரான்சிஸ் பேகன் வரை வரையறுத்து கூறினீர்கள்.அதன் பிறகு நவீன அறிவியல்.Justification மற்றும் falsification பற்றி தெளிவாக எடுத்து சொன்னீர்கள். கல்லூரிகளில் முதலாண்டு தத்துவ வகுப்புகளில் முதலில் சொல்லிக்கொடுப்பது Logics என்ற தர்க்க சாஸ்திரம்தான்.அதில் Induction,Deduction என்ற கருத்துருக்களை சொல்லி கொடுப்பார்கள்.Falsification புதிய தத்துவ கோட்பாடு.இதில் பொய் என்று ஒரு கருத்தை நிரூபிக்க எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும்.சமூகவியலாளர்கள் பெரும்பாலும் தங்களுடைய ஆய்வில் induction மற்றும் Deduction Methodology பயன்படுத்துவார்கள்.இதில் Peer review என்ற குழு முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஐரோப்பிய மனம் எப்படி நம்மை, நம் நாட்டை கணக்கில் எடுத்தார்கள் என்பது குறித்த தங்கள் சிந்தனை உண்மை.

Empiricism என்பது நிரூபணவாதம் அறிவியல் சார்ந்தது.அதை பொய்ப்பிக்க கூடிய Falsification தேவை.நிறைய நிரூபிக்கப்பட்ட அறிவியல் கருத்துக்கள் இன்று பொய்ப்பிக்கப்பட்டு வருகிறது.

அடிப்படையில் ஒரு சமூகவியலாளருக்கு ,சாதாரண மனிதனுக்கு  எது அறிவியல், எது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என வரையறுக்க தெரிய வேண்டும்.

இந்த உண்மை தெரியாததால் நம்முடைய போலி கல்வியாளர்கள் தன்னையும் குழப்பி, பிறரையும் குழப்பி வருகிறார்கள்.மன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் நம்மை நாமே சோதித்து கொள்வது நல்லது.மொத்தத்தில் எந்த கருத்து  அறிவியலுக்கு உட்பட்டது எது அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்ற தெளிவை ஏற்படுத்த வேண்டும்.தங்கள் காணொளி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.நன்றி.

தா.சிதம்பரம்.

முந்தைய கட்டுரைபக்தியும் கலையும்
அடுத்த கட்டுரைசைவம்- மெய்ஞானம்- கடிதம்