பயணம், கடிதம்

 

ஜெ,

பயணம் பற்றிய மூன்று உரைகளைக் கேட்டேன். எனக்கே பயணம் பற்றிய ஐயங்களுண்டு. பயணத்தை ஓர் அசௌகரியமாகவும், முடிந்தவரைத் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றும்தான்  நான் இதுவரை நினைத்திருக்கிறேன். என்னுடைய எல்லா பயணங்களும் சோர்வூட்டும் அனுபவங்கள்தான். நீங்கள் பயணம் பற்றி எழுதுவதை படிக்கையில் உங்களுடைய பயண அனுபவம் எனக்கு இல்லையே என நினைப்பேன்.

இந்தக் காணொளிகளைப் பார்க்கையில் தெரிகிறது. பிரச்சினை என்னுடையதுதான். நான் பயணத்தை ரசிக்கும் மனநிலையை உருவாக்கிக் கொள்ளவில்லை. பயணங்களை தேவைக்காகச் செய்தேனே ஒழிய ரசனைக்காகச் செய்யவில்லை. அப்படிப்பட்ட பயணங்களைத் திட்டமிடவில்லை. பயணங்களுக்கு தேவையான சரியான சுற்றத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை.

பயணத்துக்கான உடல்நிலை எனக்கு இல்லை என நினைத்திருந்தேன். பயணத்தில் எனக்கு உடம்பு சரியில்லாமல் ஆகிவிடும். ஆனால் அது என் மனநிலையால்தான் என்று தெரிகிறது. எந்த சூழ்நிலைக்கும் தேவையானபடி உடலுக்குத் தேவையான முன்னேற்பாடுகள் செய்துவிடமுடியும்.  அந்தந்த வயதுக்கான பயணங்களைச் செய்யமுடியும். சாகும் வரை பயணம் செய்யவேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். நன்றி

ஆர்.கிருபாகரன்

முந்தைய கட்டுரைநம் மனம், நாம்
அடுத்த கட்டுரையோகப்பயிற்சி வகுப்புகள்