ஆன்மிகமும் இலக்கியமும், கடிதம்.

 அன்புள்ள ஜெ,

ஆன்மிகவாதிகளுக்கு இலக்கிய அறிமுகம் ஏன் தேவை என்ற காணொளியைக் கண்டேன். மிகமிக முக்கியமான ஒன்று. இன்றைய சூழலில் நமக்குத்தெரியாதது இதுதான். ஆன்மிகவாதிக்கு ஆன்மிகம் மட்டும் போதும், வேறேதும் தேவையில்லை என்ற எண்ணம் உள்ளது. இலக்கிய அறிமுகம் இல்லாத காரணத்தாலே திருமுறைப்பாடல்களை திவசமந்திரம்போல பொருள்புரியாமல் முணமுணப்பவர்களை எல்லாம் நாம் அடிக்கடிக் காணநேர்கிறது. அவர்கள்தான் சட்டென்று அப்படியே மூடபக்திகளுக்குள்ளும் நுழைந்துவிடுகிறார்கள். அந்தக்கோயிலில் அற்புதம், இந்தகோயிலில் வைபரேஷன் என்றெல்லாம் அலைபவர்கள் அவர்களே. ஆன்மிகவாதிகளுக்கு இலக்கியம் தேவையில்லை என்று முன்னோர் நினைத்திருந்தால் இத்தனை அற்புதமான பாடல்களை எழுதியிருப்பார்களா என்ன? கலையும் இலக்கியமும் இல்லாமல் ஆன்மிகம் இல்லை என்பதுதான் உண்மை. 

அன்புடன்

சிவகுரு

முந்தைய கட்டுரைஉருது வகுப்புகள், ஞானசேகரன்