உருது வகுப்புகள், ஞானசேகரன்

என் அன்புள்ள ஜெ,

    உருது இலக்கிய வகுப்பு கற்றலும் கவிதையும் இசையுமாக இருந்தது. மூன்று மொழிகளைக் கொண்டு பிறந்தெழுந்த நவீன மொழி உருது என்று அறிந்ததும் அந்நாள் முழுக்க ஒருவித வியப்பு நீங்காமல் தொடர்ந்து கொண்டே இருந்தது. உருது இலக்கிய வடிவங்கள் மற்றும் உருது இலக்கிய ஆளுமைகள் பற்றி சுருக்கமான வரலாற்று சித்திரம் ஒருபக்கம், இசை, கவிதைநகைச்சுவை என கொண்டாட்டம் மறுபக்கம் என வகுப்பு நிறைவாக அமைந்தது.

குறிப்பாக கவிஞர் இக்பாலின் கவிதைகளை இரண்டாம் நாள் மதியம் நண்பர்கள் கூடி வாசித்தோம். எல்லோருக்கும் இந்தியாபாகிஸ்தான் பிரிவினைக்கு ஒரு மாபெரும் கவிஞன் முக்கிய காரணமாக இருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை

நம் ஆசிரியர் மொழிபெயர்த்தஇறைவாநாவலையும் அவரிடம் இருந்து வாங்கி வாசித்து முடித்தேன். அந்த நாவல் முழுக்க கவிஞர் இக்பாலின் கவிதையைக்கொண்டே அவரை சீண்டுகிறார் எழுத்தாளர் குத்றதுல்லாஹ் ஷஹாப்

இன்றுவரை அந்நியமான ஒன்று நமதாவதுபோல் இருந்தது. பஷீரையும் எம்.டியையயும் போல மிர்ஸா காலிப்பும் இக்பாலும் இனி உடன் வருவார்கள்

ஆசிரியர் ஃபைஸ் காதரி அவர்களுக்கு என் நன்றியும் அன்பும்

நன்றி ஜெ 

முந்தைய கட்டுரைதூலமும் சூட்சமும்
அடுத்த கட்டுரைஆன்மிகமும் இலக்கியமும், கடிதம்.