இன்னொரு அரசியல், கடிதம்

 

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு.

திருமதி. கிருஷ்ணம்மாள்  ஜெகநாதன் பற்றிய குறிப்புகளையும் அவர்கள் செயலாக்கிய  காந்திய கொள்கைகளையும்  பற்றி தெரிந்து கொண்டேன்.நுண்அலகு அரசியல் என்ற சமூக இயக்கத்தை மிகத்தெளிவாக எடுத்து கூறினீர்கள். ஒரு சமூக பிரக்ஞை உள்ள மனிதன் சமூகத்திற்கு எந்தவழியில் நுண்அலகு அரசியல் மூலம் செயலாற்ற முடியம் என்பதை புரிந்து கொண்டேன்.காந்தியை தவறாக புரிந்து கொண்டவர்கள்தான் அதிகம் மகாத்மாவை அறிந்து கொள்ள இன்னொரு காந்திதான் வரவேண்டும் போல.

எத்தனையோ பேர்கள்  கட்சி அரசியல் கலப்பில்லாமல் நுண் அலகு அரசியல் மூலம் சமூக தொண்டாற்றி இருக்கிறார்கள்.தங்கள் சிறுகதை சோற்றுக்கணக்கு கதை நாயகன்  சாகிப் போல.உங்கள் எழுத்துக்கள் ஒரு நுண் அலகு அரசியல் செயல்பாடுதான், எனினும் அதை நான் நுண்அலகு சமூக இயக்கம்(Micro Social Movement) என்றே குறிப்பிட விரும்புறேன். அரசியல் என்ற வார்த்தையே ஒரு (Macro political movement) பெரிய அரசியல் இயக்கம்)தான். அதை சுயநலமில்லாத ஒரு தனிநபர் சமூகத்திற்காக செய்யும் போது அதை நுண்அலகு இயக்கமாகத்தான் கொள்ள வேண்டும் என்பது என்னுடைய கருத்து.அரசியல் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தை ஆகிவிட்டபடியால்.

“My message is my life”என்ற மகாத்மா காந்தியின் பெயரையே இன்று அவரை,அவரது கொள்கைகளை எதிர்த்த அரசியல் கட்சிகள் அவரது பெயரை பயன்படுத்தி எத்தனை கட்சிகள் உருவாகி அழிந்து போனது.காந்தியியம்(Gandhian thought) என்பது கொள்கை. அது அகிம்சை மட்டுமல்ல .அது போல நம்மிடையே தேசத்தலைவர்கள்உருவாக்கிய பல இயக்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறி நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்..உங்கள்  எழுத்துக்கள் மூலம்  நுண்அலகு இயக்கங்கள் நிறைய உருவாகட்டும் நுண் அலகு அரசியல் அல்ல.

T.Chidambaram

முந்தைய கட்டுரைதங்கத் திருவோடு