அன்புள்ள ஜெயமோகன்.
வெறுப்பு பற்றிய காணொளி பார்த்தேன். சில நண்பர்களுக்கு அனுப்பினேன். இந்த வகையான உணர்ச்சிகள் எப்போதுமே இருந்துகொண்டிருப்பவைதான். ஆனால் இப்போது எல்லாருக்குமே ஊடகம் அமைந்துள்ளது. எவர் வேண்டுமென்றாலும் மறைந்து நின்று பேசலாம். பெரும்கூட்டமாக கூடலாம். இது அளிக்கும் வசதிகள் மனிதர்களின் வெறுப்பை பலமடங்காகப் பெருக்கிக்கொண்டிருக்கின்றன. இன்று எந்த ஒரு அலுவலகத்திலும் இந்த organized hatered மிகப்பெரிய பிரச்சினை. ஏதேனும் ஒரு துறையில் எதையேனும் சாதிப்பதற்கும் இதுதான் மிகப்பெரிய தடை. அந்த பிரச்சினையை மிக கூர்மையாக, சொந்த அனுபவத்தின் அடிப்படையில் விளக்கியிருக்கிறீர்கள்.
செல்வன் ராம்