அஜிதனின் உரையாடல்கள்

அன்புள்ள ஜெயமோகன்

மேலைத்தத்துவம் பற்றிய அஜிதனின் உரையாடல்களை இணையத்தில் கண்டேன். மிக விரிவாக ஜெர்மன் தத்துவத்தை முதன்மையாக வைத்துப் பேசுகிறார். நான் வெவ்வேறு வகைகளில் இந்தப்பெயர்களை எல்லாம் கேள்விப்பட்டிருந்தாலும்கூட ஜெர்மானிய தத்துவம் எப்படி நவீன ஐரோப்பியத் தத்துவத்துக்கே அடிப்படையாக அமைந்தது என்பதை அறிந்திருக்கவில்லை. அந்தத் தகவல்களை ஒன்றுடன் ஒன்று கோத்து மிக அழகாக முன்வைக்கிறார். வெறும் தகவல்களாக அவற்றை அறிந்திருக்காமல் தத்துவப்பிரச்சினைகளாக முன்வைப்பதும், அவற்றின் இன்றைய இடத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் விவரிப்பதும் அவற்றில் அவருக்கு இருக்கும் நுணுக்கமான வாசிப்பை காட்டுகிறது.

இணையத்திலுள்ள பேட்டிகள் உரையாடல்களில் எல்லாமே அஜிதன் மிக ஆழமான ஓர் ஆளுமையாகவும் அதேசமயம் நாணமும் சிரிப்பும் கொண்ட சின்னப்பையனாகவும் தெரிகிறார். ஒரு செல்லப்பிள்ளையின் பாவனைகளுடன் பேசுகிறார். அவருடைய பேச்சைக் கேட்பது ஒரு நல்ல அனுபவமாக அமைந்திருக்கிறது. அஜிதனுக்க்கு என் மனமார்ந்த ஆசிகள்.

ராதா மகேந்திரன்

 

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமாவும் தமிழகமும்
அடுத்த கட்டுரைஇந்திய ஆலயக்கலை வகுப்புகள்