அன்புள்ள ஜெ அவர்களுக்கு.
நான் கோபிநாத். காஞ்சிபுரத்தில் வசித்து வருகின்றனர்.நீங்கள் எனக்குக் unified wisdom you tube channel மூலம் எனக்கு அறிமுகம் கிடைத்தது. உங்களது காணொளி மூலம் என மனதிற்கு பெரும் திறப்பு இருந்தன. அதை தொடர்ந்து உள குவிப்பு பயிற்சி வகுப்புகள் பங்கு கொண்டேன். தியானம் பயிற்சியை கற்றுக் கொண்டு இன்று வரை பழக்கத்தில் வைத்துள்ளேன்.நிங்கள் எழுதிய அறம் மற்றும் கதையை அறிதல், புத்தகத்தை படித்து கொண்டுருக்கின்றோன்.தியானம் மற்றும் படித்தல் மூலம் என் மனம் நிறைவக உள்ளது. தனிமை என்றால் தன்னுடன் இருத்தல் என்று ஒரு அர்த்த்தை எனக்கு புரிய வைத்திர்கள்.
ஏன் உங்கள் உடன் தனிமையில்என் உங்களால் இருக்கும் முடியாத? என்ற கேள்வி ஒரு காணொளி நிங்கள் கேட்ட கேள்வி என்னிடம் நான் கேட்டுகொண்டோன். என் விட்டு பின் புரம் இருக்கும் இடத்தில் மரங்கள் உடன் எனக்கு கிடைக்கும் நேரத்தில் என்னுடன் நான் இருக்கிறேன்.இந்த செயல் எனக்கு புது அனுபவத்தை தருகிறது.எனக்கு உங்களை நேரில் உங்கள் ஊரில் உங்கள் வீட்டில் பார்க்க வேண்டும் என்று ஒரு ஆசை இருக்கிறது. உங்களிடம் நேரில் பேசும் அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது. எனக்கு சில நல்ல அனுபவங்கள் அறிமுகம் செய்து வைத்த உங்களை பார்க்க வேண்டும். இந் நாள் வரை வாழ்வில் சலிப்பு இல்லத மனிதனை பார்க்க வேண்டும். அதற்கு அனுமதி கிடைக்குமா…
கோபிநாத்