ஆசிரியர்களுடனான உறவு

ஜெ,
குருவுக்கும் மாணவருக்குமான உறவு காணொளியை கண்டேன். என் கேள்விக்கு பதில் கிடைக்குமா என்று எதிர்பார்த்து கொண்டிருந்தேன். நேரடியாக இல்லாவிட்டாலும் காணொளியில் ஓரிடத்தில், பெரும்பாலான சமயம் ஆசிரியர் மாணவனை குறித்த பல கருத்துகளை வெளியே சொல்வதேயில்லை. சுட்டிக்காட்டி திருத்த வேண்டியதை குறிப்பிடுவார்கள். எனவே ஆசிரியர் தன்னை எப்படி மதிப்பிடுகிறார் என எண்ணிக்கொண்டே இருப்பது கல்விக்கு தடை என்ற உங்கள் சொற்களை எனது வினாவிற்கான விடையாகவே கொள்கிறேன். நன்றி ஜெ
சக்திவேல்
முந்தைய கட்டுரைஓவியத்தைக் கண்டடைதல்