வைரமுத்து விவகாரமும் சாதியும்

அன்புள்ள ஜெ

வைரமுத்துவும் ராமரும் முக்கியமான ஒரு பேச்சு. வைரமுத்துவை நம்மவர் சும்மா வசைபாடவில்லை. அந்த வசைபாடலை கூடுதலாக முன்வைப்பவர்கள் பிராமணர்கள். ராமனைப் பற்றியெல்லாம் நாங்கள் பேசிக்கொள்கிறோம் என்பதுதான் அவர்களின் குரல். வைரமுத்து பிராமணர் அல்ல என்பதுதான் இங்கே உண்மையான பிரச்சினை. ஏற்கனவே ஒரு ஜீயர் வைரமுத்து காக்காய் போல கறுப்பாக இருக்கிறார், காகாசுரன் என்று சொன்னார். இந்த இனவெறியையும், சாதி வெறியையும் நாம் புரிந்துகொள்ளாவிட்டால் எளிதாக ஏமாந்துவிடுவோம். இந்தக் கும்பல் அண்மைக்காலம் வரை சாதிவெறியால் கம்பனையே ஏற்றுக்கொள்ளாமலிருந்ததுதான். கம்பன் சைவன் என்பதும், உவச்சர்குலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவரை ஏற்றுக்கொள்ள இவர்களுக்கு தடையாக இருந்தது.

இன்றைக்குக் கூட வைரமுத்துவை வசைபாடுகிறார்கள். கம்பனா இல்லை இன்னொரு சாமானிய பிராமண கவிஞரா என்று கேளுங்கள் மென்று முழுங்குவார்கள். ஏன், நம்மாழ்வாரையே கீழ்சாதி என சொல்லுபவர்கள் இவர்களிடையே உண்டு. பாலே ஆனாலும் அழுக்கடைந்த பாத்திரத்தில் வைத்தால் பயனற்றது என்று சொல்வதுபோல விஷ்ணுவை அறிந்த ஞானம் வெளிப்பட்டாலும் நம்மாழ்வார் சூத்திரர் என்பதனால் முழுக்க ஏற்கமுடியாது என்று இவர்களில் ஓர் உரையாசிரியர் எழுதியதுமுண்டு. இவர்கள் தங்கள் பேச்சுகளில் எப்படியெல்லாம் சாஸ்திரங்களையும் மாபெரும் காவியங்களையும் இழிவுசெய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். எந்த மன உயரமும் இல்லாத சிறிய மனிதர்கள். நீங்கள் சொல்வது போல சிறுமைப்படுத்தும் உரிமை எங்களுக்குத்தான் உண்டு, வேறெவருக்கும் இல்லை என்று சொல்கிறார்கள். அற்பர்கள்.

 

ராஜ் செல்லத்துரை

 

 

முந்தைய கட்டுரைதியானம் வழியாக மீட்பு, கடிதம்