அன்புள்ள ஜெ,
நாம் இங்கே கீழடி கீழடி என்று கொப்பளித்துக்கொண்டிருக்கிறோம். நமக்கு தொல்லியலோ வரலாறோ தெரியாது. உலக வரலாறே தெரியாது. நாமே உலகின் தொன்மையான மூத்த குடிமக்கள் நாம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோம். நமக்கு வரலாற்றை எழுதும் வழக்கமே இல்லை. நமக்குக் கிடைத்த வரலாற்றுத்தரவுகள் மிகச்சொற்பமானவை. அவையும் அதிகம்போனால் மூவாயிரமாண்டு பழமையானவை. ஆனால் எகிப்து ஆறாயிரமாண்டுகளாக மாபெரும் கட்டுமானங்களுடன் ஓங்கி நின்றுள்ளது. பல்லாயிரம் பக்கம் அளவுக்கு எழுத்துப்பதிவுகளும் உள்ளன. நம் மாயையை அப்பட்டமாக போட்டு உடைக்கும் அபாரமான சிறிய உரை இது. பலபேர் பார்க்கவே மாட்டார்கள். குமிழிகள் உடைந்துவிடும் என அஞ்சுவார்கள்.
ஜெய்சேகர்