வடகிழக்கின் முன்னேற்றத்தின் பொறுப்பு

அன்புள்ள ஜெயமோகன்,

வடகிழக்கை தேக்கநிலையில் ஐம்பதாண்டுகள் வைத்திருந்தவர்கள், அங்கே இனவாதத்தை வளர்த்தவர்கள் யார் என்பதை நீங்களே உங்கள் பேச்சில் சொல்லிவிட்டீர்கள். ஒரு விமானநிலையமும் ஒரு ஆறுவழிச்சாலையும் எந்தவகையான பொருளியல் மலர்ச்சியை உருவாக்கியுள்ளன என்று சொல்லிவிட்டீர்கள். ஆனால் அதை கொண்டுவந்தது யார், யார் அதை எதிர்த்தார்கள் என்று சொல்ல உங்கள் நாக்கு வளையவில்லை. திமுகவின் சாதனைகளைச் சொல்லும்போது கட்சிப்பெயர் சொல்வீர்கள். தலைவர் பெயரைச் சொல்வீர்கள். உங்களால் மறுக்கமுடியாத ஓர் உண்மையை கண்முன் காணும்போது பசப்புகிறீர்கள்.

மகேஷ் கார்த்திக்

அன்புள்ள மகேஷ்,

கட்சிக்காரர்களுக்கு ஒரு மனநிலை உண்டு. அவர்களுக்கு அவர்கள் தரப்பு முழுமையாகவே சரி, எதிர்த்தரப்பு முழுமையாகவே தவறு. அவர்கள் சொல்வதையே அனைவரும் சொல்லவேண்டும் . அதை என்னிடம் எதிர்பார்க்கவேண்டாம். நான் எதைக் காண்கிறேனோ, உணர்கிறேனோ அதை இயல்பாக வெளிப்படுத்துகிறேன். அதி உங்கள் அரசியலுக்கு எது உகந்ததோ அதை மட்டும் நீங்கள் எடுத்துக்கொள்வீர்கள். எது உகக்காததோ அது உங்கள் கண்கள் பார்பதுமில்லை.

ஜெ

முந்தைய கட்டுரைஇளையதலைமுறையின் சிக்கல்கள்