இளையதலைமுறையின் சிக்கல்கள்

அன்புள்ள ஜெ

இன்றைய தலைமுறையின் பொறுப்பின்மை என்னும் தலைப்பை வாசித்ததும் நான் நீங்கள் ஏதோ கடுமையான குற்றச்சாட்டுக்களைச் சொல்லப்போகிறீர்கள் என்றும், இளைய தலைமுறை அதை பூமர் கருத்து என்று சொல்லப்போகிறது என்றும் நினைத்துக்கொண்டேன்.உண்மையில் நீங்கள் சொல்வதெல்லாம் நடைமுறையில் நிகழ்பவை. கவனக்குவிப்பின்மை இளைய தலைமுறையினரில் மிகப்பெரிய பிரச்சினையாக இருந்துகொண்டிருக்கிறது, அரை மணி நேரத்துக்கு மேல் எதையும் கவனிக்க முடிவதில்லை. செல்பேசி இல்லாமல் இருக்கவே முடியவில்லை. எப்போதும் எங்கோ தொடர்புகொண்டபடியே இருக்கிறார்கள். இன்ஸ்டாவில் அரைநிமிட வீடியோக்கள் வழியாக மூளை ஒழுகிச்சென்றபடியே இருக்கிறது. அதனாலேயே சோஷியலைஸிங் செய்ய முடியவில்லை. எவருடனும் பழக தெரியவில்லை. அதன் விளைவுதான் ஒரு கடிதம்கூட போடத்தெரியாமல் இருப்பது. ஏன் இப்படி இருக்கிறார்கள் என்றால் பெற்றோர் அவர்களை அப்படி கொஞ்சிக்கொஞ்சி வளர்ப்பதனால்தான்.

சரவணன் குமரேசன்

முந்தைய கட்டுரைபத்மாலட்சுமி, அமெரிக்கா- கடிதம்