கரூர் விபத்து, கடிதம்

 

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு.

கரூர் சாவுகள் பற்றிய உங்கள் பார்வை உண்மை..ஒரு சமூகவியல் மாணவன் என்ற முறையில் கரூர் கூட்டத்தை ஒரு Mob என்று சமூகவியலில் கூறுவார்கள். அதாவது கட்டுக்கடங்காத கொள்கையற்ற கூட்டம் என்பார்கள்.இதை நாம் எங்கும் காணலாம். மேலும் Charismatic leadership (அரிதாரம் பூசிய தலைமை) என்பார்கள்.ஒருமுறை திருக்குறுங்குடி மலைமேல் நம்பி கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை  சென்றிருந்தேன் ,கட்டுக்கடங்காத கூட்டம்.குறுகிய மலைப்பாதை தவறினால் மலைவீழ்ச்சியில் விழவேண்டியதுதான்.காவலர்கள் தங்களுடைய பணியை செய்ய சரியாக அறிவுரைகள் வழங்கப்பட்டதாக தெரியவில்லை.சிலர் தனிப்பட்ட முறையில் தாங்களே கூட்டத்தை வரைமுறை செய்து அனுப்பி கொண்டிருந்தார்கள்.பொதுவாகவே நமது நாட்டில் Civic sense (குடிமை உணர்வு)மிகக்குறைவு.அதனால் ஏற்படும் விபரீதங்கள்தான் இதுபோன்ற நிகழ்வுகள்.சில சமயங்களில்  So called படித்த மக்களே இதை பின்பற்றுவது இல்லை.தாங்கள் கூறுவதைப்போல இதற்கு கருத்து தெரிவிக்க உங்கள் போன்ற எழுத்தாளர்களை கவனிப்பதுவும் இல்லை. பொதுகருத்துக்கு (Public opinion) கூற ஆயிரம் பேர் உண்டு. இந்திய நாட்டில் பேரிடர் மேலாண்மை ( Disaster Management )பற்றிய கல்வி இன்னும் வளரவில்லை. தமிழ் நாட்டிலும் பேரிடர் மேலாண்மை துறை உண்டு .இதை எப்போதெல்லாம் பயன்படுத்த வேண்டுமோ அப்போது பயன் படுத்துவதில்ல.திரு.விஜய் போன்ற தலைவர்கள் நிறைய உருவாகி வருகின்றனர்.வருங்காலத்தில் கூட்டத்தை அல்ல இது போன்ற தலைவர்களை யார் கட்டுப்படுத்த போகிறார்கள். கூட்ட நிர்வாகம் (Crowd management )மிக அவசியமான ஒன்று.எங்கும் கூட்டம் எதிலும் கூட்டம். மக்கள் தொகை வளர்ந்து வரும் நாட்டில் கட்சிகளும் வளர்ந்து வருகின்றது. ஆளுக்கொரு கட்சி. கொள்கைகள் அற்ற கூட்டம். தவறு எங்கே என்றால் அடிப்படை மனித விழுமியங்களை பேணத்தவறி விட்டோம் .எப்படியோ பணம் சேர்த்தால் சரி,கூட்டம் சேர்ந்தால் சரி  என்றாகிவிட்டது.சில பழைய  அரசியல் கட்சிகள் அரசு இயந்திரங்கள் போலவே தங்களை அமைத்து கொண்டு கட்சி நிர்வாத்தை நடத்துகிறார்கள்.ஆனால் பொதுமக்கள்  நலனில்அவர்களுக்கு  அக்கரையில்லை. ஐந்து வரடங்களுக்கு ஒருமுறை மக்காளால்  கொடுக்கப்படும் சிம்மாசனம் மட்டும் தேவை.
ஆண்டாண்டு காலமாக திரைத்துறையையும் தமிழக அரசியலும் பின்னிப்பிணைந்துள்ளதை பிரிக்க முடியாது ஆனால் வரைமுறை படுத்த முடியும். திரைத்துறை தவிர்த்து இதுநாள் வரை ஒரு மக்கள் தலைவரை நாம் இன்னும் அடையாளம் காணமுடியவில்லை என்பது தமிழகத்தின் சாபக்கேடு..பல்கலைக்கழகங்கள் செய்ய முடியாததை திரைநட்சத்திரங்கள் செய்ய முடியும் என்று நம்புவது வரை இவை போன்ற மனிதர்கள்  உருவாக்கும் பேரிடர்கள் (Man made disaster)நடந்து கொண்டிருக்கும்.பொதுக்கருத்தை (Public opinion) உருவாக்கும் அரசியல் தலைவர்களை கண்டு கொள்வது மிக அவசியம்.விழிப்புணர்வு இல்லாத மனித சமுதாயம் மந்தைகள் கூட்டத்திற்கு சமம்.
இதை தனிமனிதன்தான் தன்னுடைய அறிவால் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
தா.சிதம்பரம்
தோவாளை.
முந்தைய கட்டுரைவேதங்களைக் கற்பது…