வாசிக்கவைப்பது…

அன்புள்ள ஜெ

குழந்தைகளைப் படிக்கவைப்பது பற்றிய உரை ஒரு சிறப்பான, யதார்த்தமான பதிவு. பிள்ளைகளை வாசிக்கச்செய்வது என்பது எளிமையான விஷயம் அல்ல. இந்தியச்சூழலில் அவர்களின் தோழர்கள் தோழிகள் எவருமே வாசிப்பது இல்லை. அனைவருமே டிவி, செல்போன் அடிமைகள். ஆகவே இவர்களும் அங்கே இழுக்கப்படுகிறார்கள். வாசிக்க வந்தாலும் வாசித்தவற்றை அவர்கள் எவரிடமும் பேசமுடியவில்லை. ஆகவே மீண்டும் கணிப்பொறி விளையாட்டுக்கே சென்றுவிடுகிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்தினால் அது ஏற்கனவே அவர்களுக்கு இருக்கும் படிப்புச்சுமையுடன் இன்னொரு படிப்பாக ஆகிவிடுகிறது.

சுவாரசியம், பொழுதுபோக்குக்காக இன்றைய குழந்தைகள் வாசிக்காது. வாசிப்பது என்ற அகங்காரத்துக்காகவே வாசிக்கும். ஆகவே அதைத்தான் உருவாக்கவேண்டும். நீ வேறுமாதிரி. உன் திறமை வேறுமாதிரி. ஆகவே நீ வாசிக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். அதோடு அவர்களுடன் அமர்ந்து வாசிக்கவேண்டும். வாசித்தவற்றை அவர்களிடம் பேசவேண்டும். அவர்கள் வாசித்தவற்றைப்பற்றி நிறைய பேச வாய்ப்பு கொடுக்கவேண்டும். அப்படியென்றால் மட்டும்தான் அந்த ஆர்வம் நீடிக்கிறது. என் அனுபவம் இது.

சங்கர்ராமன் கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைகரூர் விபத்து, கடிதம்
அடுத்த கட்டுரைதரிசனம், கடிதம்