சைவம், ஆசிரியனின் காலடியில்

ஜெயமோகன் சார் வணக்கம் 

எப்படி இருக்கிறீர்கள்,

இருட்டை வீடு புகுந்து வெளிச்சம் திருவதைப் போல என் மனதை கொள்ளை கொண்டு போகிறீர்கள்,

என்னை அறிமுகம் செய்வதற்கென்று எந்த வித அடையாளம் இல்லாத போதும் என்னை அடையாளப்படுத்திக் கொள்கிறேன் செல்வநாயகம் என்ற செநா என்று,

நிறைய வருடங்களுக்கு முன்பு தளம் என்ற இதழ் உங்களின் அறம் என்ற புத்தகத்தை விமர்சன பார்வைக்கு எடுத்துக் கொண்டது அதில் கலந்து கொண்டவன் என்ற பெருமையைத் தவிர வேறு ஏதும் அறியேன்,

ஆனால் எங்கள் கவிஞர், அண்ணா, குரு இப்படி எந்த வடிவத்தில் நோக்கினாலும் அதற்கு மிக பொருத்தமான பண்பாளர் கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா அவர்களின்  திருமுறைகள் வகுப்பு அக்டோபர் -2025 ஆண்டு 10,11,12ஆகிய தேதிகளில் கலந்து கொண்டேன்,

நான் கலந்து கொள்ள முக்கிய காரணம் எங்கள் குரு இருக்கும் இடத்தில் நான் இருக்க வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே,

அப்படி இருக்க வேண்டும் என்பது பத்து வருடங்களுக்கு முன்பு நான் கண்ட கனவு அந்த கனவு அவரிடம் மூன்று நாட்கள் உண்மையான மாணவனாக இருந்து கற்றுக் கொண்ட விதம் எல்லாமே வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது,

உணர்தல் என்ற வார்த்தையையும் தாண்டிய விதம் அது, அதற்கு முக்கிய காரணமாக நீங்கள் இருந்தீர்கள் என்பதே எனக்கு பேரானந்தம்,

சமணர் படுக்கையைப் போன்ற ஒரு வானத்தின் அழகை தேர்வு செய்து அதில் அறிவுசார் மக்களை நடமாட விட்டு மிக முக்கிய வாழ்வியல் தடயங்களை மறக்க முடியாமல் நெஞ்சில் ஏற்படுத்தி விட்டீர்கள்,

நான் திருச்சியில் இருந்து வெள்ளிமலை என் இரண்டு சக்ர வாகனத்தில் வந்தேன் அந்த அனுபவம் அலாதியானது,

அதைவிட எங்கள் கவிஞர் காலடித் தடங்களில் படுத்து உறங்கி சிரித்து மகிழ்ந்து நின்ற தருணங்கள்,

உங்கள் எல்லோருக்கும் நன்றி என்ற ஒரு வார்த்தையில் அன்பை அளவிட முடியாது 

உங்கள் புத்தகங்கள் படிப்பதன் மூலமாக உலகை தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறேன்,…

அன்புடன் 

செநா

முந்தைய கட்டுரைஇந்து ஞானம் ஒரு கேள்வி