எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு.பனை மரம் ஒரு பண்பாட்டு அடையாளம். நெல்லை மாவட்ட மக்களோடு பின்னிப்பிணைந்த ஒரு பண்பாடு.ஒத்தைப்பனை சுடலைமாடன் நெல்லை மாவட்டத்தின் கலாச்சார அடையாளம்.இன்றும் சுடலைமாடன் கிராம தெய்வத்தை பனையுடன் சம்பந்தப்படுத்தி கிராம கொடைவிழாக்கள்நடக்கிறது.அண்மையி ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியாளர் மற்றும் வனத்துறை மற்றும் அரசு தனியார் பள்ளிகள் சேர்ந்து நடத்திய பனைவிதை நடு விழா 15 /10/2025 அன்று திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நடைபெற்றது.இதில் கங்கைகொண்டான் நம்ம ஊரு குளோபல் பள்ளி மற்றும் அரசுப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு நூற்றுக்கணக்கில் பனை விதைகளை நட்டு விழாவில் பங்கெடுத்து கொண்டனர்.இந்த நிகழ்வு பனை மரங்களை பேணும் நிகழ்வாக அமைந்தது.
தா.சிதம்பரம்












