ஆங்கிலக் காணொளிகள்

அன்புள்ள ஜெயமோகன்,

உங்களுடைய காணொளிகளை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவற்றினூடாக ஒவ்வொரு நாளும் நீங்கள் தொடர்ந்து எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் ஒரு உணர்வை அடைகிறேன். இப்போது ஆங்கிலத்தில் வகுப்புகளை நடத்த தொடங்கி இருக்கிறீர்கள் .இந்த காணொளிகளை ஆங்கிலத்தில் போடுவீர்கள் என்றால் எங்களுடைய நண்பர்களுக்கு இவற்றை பரிந்துரைப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

ஆர். தனசேகரன்

 

அன்புள்ள தனசேகரன்,

ஆங்கிலக் காணொளிகளை போடுவதைப் பற்றிய திட்டம் உண்டு. ஆனால் இப்போது தமிழ்க் காணொளிகள் தொடர்ச்சியாக பரவலாக கேட்கப்படுவதனால் ஆங்கிலம் கூடுதலாக சுமையாக ஆகிவிடுமோ என்ற குழப்பம் உள்ளது.

ஆங்கில வகுப்புக்கு வருபவர்களின் எண்ணிக்கை சற்று பெருகும் போது மட்டும் தான் ஆங்கில காணொளிகளுக்கும் பயனிருக் என்பதை இன்னொரு எண்ணம் .நீங்கள் இந்த ஆங்கில வகுப்பு பற்றிய செய்திகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கூடுதலாக ஆங்கிலம் வழியாக தெரிந்து கொள்ளும் வாய்ப்புள்ள உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரைக்கலாம் என்று நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்திய தத்துவம் ஆங்கில வகுப்பு
அடுத்த கட்டுரைHindu Philosophy: First Level in English