அமெரிக்கவிழா, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

நியூயார்க் விழா பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறேன். மிக ஊக்கமூட்டும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. இதன் வழியாக நம்மை நாம் உலகுக்கு அறிமுகம் செய்து கொள்கிறோம். முதன்மையாக நம்முடைய குழந்தைகளுக்கு நாம் நம்மை அறிமுகம் செய்து கொள்கிறோம்.

இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் உண்மையிலேயே இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக புரிந்து வருகிறது என்று நினைக்கிறேன். உங்களுடைய அமைப்பு சார்ந்து அங்கு ஏதோ ஒரு நிகழ்ச்சி நடத்தப் போகிறீர்கள் என்று எண்ணம்தான் எனக்கும் இருந்தது. ஆனால் இது இந்திய மொழிகளில் முதல்முறையாக் நடக்கும் ஒன்று. இதன் வழியாக நம்மை நாம் அமெரிக்காவில் அறிவியக்கத்திற்கு முதல் முறையாக அறிமுகம் படித்து கொள்கிறோம். அமெரிக்காவிலிருந்து எழுத்தாளர்கள் வந்து கலந்து கொள்ளும் ஒரு தமிழ் நிகழ்வு என்பது முதல் முறையாக இதுதான்.

இதற்குப் பிறகும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்ந்து நடக்க வேண்டும். இதன் வழியாக நம்மை நாம் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருக்க வேண்டும். எளிமையான ஒரு செயல் அல்ல. ஆனால் தொடர்ந்து முயற்சி வழியாகத்தான் நம்முடைய எழுத்தும் பண்பாடும் அங்கு அறிமுகம் செய்யப்பட முடியும்.

பாரதிக்குமார்

 

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம் எப்படி மூன்றுநாளில் கற்பிக்கப்படுகிறது?