மகிழ்ச்சியைக் கண்டடைதல்- கடிதம்.

 

அன்புள்ள ஜெயமோகன்,

எது மகிழ்ச்சி என்ற சிறிய உரை உண்மையில் மிக ஆழமான ஒன்று. மகிழ்ச்சி என்பது நமது தேர்வு. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற முடிவுடன் அதற்கேற்ப வாழ்க்கை அமைத்துக் கொள்பவர்கள் மிகக் குறைவு. எது தனக்கு மகிழ்ச்சியாகிறது என்று தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவு.

தன் மகிழ்ச்சி பிறரிடமிருந்து வர வேண்டும் என்றும் அதை தர மறுக்கிறார்கள் என்றும் எண்ணிக்கொண்டு பிறரை துன்புறுத்துபவர்கள் தான் இன்றைக்கு நம்மைச் சூழ்ந்து இருக்கிறார்கள் .அதன் வழியாக எங்கும் அவர்கள் அமைதியின்மையையும் கசப்பை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் .மகிழ்ச்சியை நாம் தேடிச் செல்லக்கூடாது. நாம் நம் மகிழ்ச்சியை நம்முடைய உள்ளிருந்து கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுடைய மகிழ்ச்சி கற்றல் கற்பித்தல் எழுதுதல் ஆகிவிட்டது என்று சொன்னீர்கள், என் மகிழ்ச்சி அலைந்து திரிவதில் இருப்பது என்பதை நான் கண்டு கொண்டேன். ஒவ்வொரு நாளும் சிறிதாவது பயணம் செய்வது என்பது என் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த பயணத்தை சிறிய குறிப்புகளாக நானே எழுதிக் கொள்கிறேன். அது எனக்கு மிகப்பெரிய விடுதலையை அளிக்கிறது. அருமையான காணொளிக்கு நன்றி .

சரவணகிருபாகரன்

முந்தைய கட்டுரைகண்ணன் அருள்