அன்புள்ள ஜெ
தமிழ்ச் சிற்றிதழ்ச்சூழலிலுள்ள புனிதமான தோல்விக்கான மனநிலையைப் பற்றி உங்கள் காணொலியில் சொல்லியிருந்தீர்கள். சிரித்தபடியே அதை வாசித்தேன். ஏன் தோற்றோம் என்ற பெரிய தலையங்கத்தை எழுதிவிட்டுத்தான் சிற்றிதழ்களையே தொடங்குவார்கள் என்று சுந்தர ராமசாமி சொன்னது மிகச்சரி. எந்த வகையான திட்டமும் இல்லாமல் தோற்பதற்கென்றே செயலாற்றுகிறார்கள். ஆச்சரியமான விஷயம்தான் அது. எழுதமுடியாமல் போன ஜீனியஸ், குடித்தே அழிந்த ஜீனியஸ் என்ற இரண்டு வகையினரையும் கொண்டாடும் ஒரு பெரிய கூட்டம் நம்மிடையே உள்ளது. அந்த அழுகல் மனநிலையை உதறாமல் நம்மால் எதையும் சாதிக்கமுடியாது.
சந்திரகுமார்.












