நியூயார்க் மாநாடு, இந்தியா, அமெரிக்கா.

 

அன்புள்ள ஜெ

நியூயார்க் மாநாடு அறிவிப்பு வெளிவந்ததும் இந்நிகழ்ச்சிக்கு எதற்காக நியூயார்க் என்று கேட்டவர்களில் நானும் ஒருவன். இங்கே இலக்கியத்தை முன்வைக்கவேண்டியதுதானே என்று மேதாவித்தனமாக எழுதவும் செய்தேன்.  ஒரு விஷயம் செய்யப்படும்போது அதைப்பற்றிக் கருத்து எவரும் சொல்லலாம். ஆனால் அந்தக் கருத்துக்கு ஏதேனும் மதிப்பிருக்கவேண்டும் என்றால் சொல்பவரும் ஏதேனும் செய்திருக்கவேண்டும். அதை நாமெல்லாம் உணர்வதில்லை.அனைவருக்கும் அவரவர் இடம் மிகையானதாகவே தெரியும். நான் சொல்கிறேன் என்று எதையாவது நாம் சொல்லும்போதுசொல்ல நீ யார்?’ என்று எவரும் முகநூலில் கேட்பதில்லை. 

அண்மையில் இந்தியாவின் முதன்மை ஊடகங்கள் முழுக்க நியூயார்க் நிகழ்வு பற்றி செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா மொழிச்சூழலிலும் இச்செய்தி சென்று சேர்ந்திருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியா, ஃப்ரண்ட்லைன் கட்டுரைகள் எல்லாமே மிக விரிவானவை. இந்த வகையான கவனம் இதுவரை நவீனத்தமிழிலக்கியத்திற்குக் கிடைத்ததே இல்லை. இங்கே எவ்வளவோ நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எவற்றையுமே இந்திய அளவில் எவருமே கவனித்ததில்லை. நம் மீது எங்கு எந்த மதிப்பும் இல்லை என்பது டெல்லியில் வசிக்கும் என்னைப்போன்ற எவருக்கும் தெரிந்த விஷயம்தான். இப்போது கவனிப்புக்கான காரணம் நியூயார்க் என்னும் மந்திரச்சொல். உலகின் நவீன இலக்கியத்தின் ஒரு மையம் இன்று நியூயார்க்தான். அங்கே, நகர்மையத்தில் நிகழ்கிறது என்பதும், அதில் முக்கியமான அமெரிக்க படைப்பாளர்கள் கலந்துகொள்கிறார்கள் என்பதும்தான் இந்தக் கவனத்தை உருவாக்கியுள்ளது. 

அந்த வகையில் உலக இலக்கியத்தின் போக்கையும் மனநிலையையும் உணர்ந்து நீங்கள் எடுத்த முயற்சி இது. அதைப்பற்றி கருத்துச்சொன்னபோது எனக்கு இதெல்லாம் என்ன என்றே தெரியாது. என்னைப்போன்ற நிலையில்தான் இங்கே பலர் இருந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆர். ராஜ் கேசவ்

முந்தைய கட்டுரைபெருமுயற்சிகளுக்கு முன்பாக…