1993 முதல் ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் குரு நித்யா இலக்கிய அரங்கம் இந்த ஆண்டும் நிகழும். பல ஆண்டுகளாக இது ஊட்டி குரு நித்யா குருகுலத்தில் நிகழ்ந்து வந்தது. அதன்பின் ஏற்காடு முதலிய ஊர்களிலும் நிகழ்ந்தது. இலக்கியப்படைப்பாளிகளுடனான சந்திப்புகள், இலக்கிய உரையாடல்கள் என இலக்கியத்தை மட்டுமே மூன்றுநாட்கள் கொண்டாடும் ஒரு நிகழ்வு இது.
இந்த அரங்கில் தமிழில் எழுதும் படைப்பாளிகள் பலர் கலந்துகொள்வார்கள். அவர்களுடன் இளம்படைப்பாளிகள் உரையாடவும் விவாதிக்கவும் வாய்ப்பு அமையும். நாவல், சிறுகதை, கவிதை, இலக்கிய விமர்சனம் என்னும் தளங்களில் விவாத அமர்வுகள் நிகழும். இவை அனைவரும் பங்குகொள்ளும் விவாதங்களாக இருக்கும். இளம்படைப்பாளிகளும் வாசகர்களும் இலக்கியத்தை அறியும் வாய்ப்பு இது.
நாள் மே 22 23 மற்றும் 24
தொடர்புக்கு [email protected]
வரும் நிகழ்வுகள்

நண்பர்களின் கோரிக்கைக்கு ஏற்ப மே மாதம் இறுதி வாரத்தில் 29, 30 31 தேதிகளில் வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்களாகிய நண்பர்களைச் சந்திக்கலாம் என நினைக்கிறேன். வழக்கமான வகுப்புகளாக அன்றி இது ஓர் இலக்கியச் சந்திப்பு ஆக நிகழும்.
சிறுகதை, நாவல், குறுங்கட்டுரை ஆகிய கலைவடிவங்களின் அடிப்படைகள் பற்றி 3 வகுப்புகள் மற்றும் முறைசாராத இலக்கிய உரையாடல்கள் நிகழும். எழுதவிருப்பவர்கள், வாசகர்கள் பங்குகொள்ளலாம்.
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
நாள் மே 29, 30 மற்றும் 31
தொடர்புக்கு [email protected]

இந்திய மரபிசை ரசனை அறிமுக வகுப்புகள்
ஜெயக்குமார் நடத்திவரும் இந்திய மரபிசை வகுப்புகள் பலருக்கு வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் அனுபவ உலகைத் திறந்துவிட்டவை. தொடர்ச்சியாக அவற்றில் பங்கேற்பாளர்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றனர்
திரைப்பாடல்கள் வழியாகவும் அறிந்த கீர்த்தனைகள் வழியாகவும் எளிமையான முறையில் இந்திய மரபிசையின் அடிப்படைகளை அறிமுகம் செய்பவை இந்த வகுப்புகள். இவை இந்திய மரபிசையின் எளிமையான தொடக்க இலக்கணத்தை அறிமுகமான பாடல்கள் வழியாகக் கற்பிக்கின்றன. இவை பாடுவதற்கான பயிற்சிகள் அல்ல , ரசிப்பதற்கான வகுப்புகளே
இந்த அறிமுகத்தைத் தொடர்ந்து இசையை கேட்க ஆரம்பிப்பவர்கள் தங்களுக்கு ஏற்கனவே மரபிசை ரசனை இருப்பதை, தாங்கள் ரசித்த பல மெட்டுகள் உண்மையில் மரபிசையின் ராகங்களே என்பதை உணர்வார்கள். அது அவர்களுக்கு நீண்ட பாதை ஒன்றின் முதல் திறப்பாக அமையும்.
நம் மரபின் பெரும்செல்வங்களில் ஒன்று மரபிசை. அதில் ஓர் அறிமுகம் என்பது பண்பாட்டுக்குள் நுழைவதுதான். மேலையிசையின் அடிப்படை அறியாத மேல்நாட்டினர் இல்லை. இந்திய இசையை அறிந்திருப்பதென்பது மிக அவசியமான ஒரு பண்பாட்டுப் பயிற்சி.
நாள் ஜூன் 5, 6 மற்றும் 7
தொடர்புக்கு [email protected]












