அந்தரங்கக் குரல்

 

அன்புள்ள ஜெ

உங்கள் காணொலிகளின் ரசிகன் நான். நான் உங்கள் கட்டுரைகளை வாசிப்பதுண்டு என்றாலும் இந்தக் காணொலிகளில் நீங்கள் கண்முன் சிந்திப்பது தெரிகிறது. தயாரிக்கப்பட்ட உரையாக இல்லாமல் அங்கே அப்போது கண்முன் நீங்கள் சிந்திப்பதுதான் இந்த உரைகளின் முக்கியமான அம்சம் என்று நினைக்கிறேன். இத்தகைய அனுபவம் உங்களுடன் அமர்ந்து நீண்ட உரையாடலைச் செய்தால் மட்டுமே கிடைக்கக்கூடும். அது இந்தக் காணொலிகள் வழியாகவே அமைகின்றது.

இந்தக் காணொலிகளிலும் என்னை மிகவும் கவர்பவை நீங்கள் உங்கள் சொந்த அனுபவம் சார்ந்து பேசும் காணொலிகள். உங்கள் ஆசிரியருடனான உங்கள் உரையாடல் பற்றிய காணொலி மிக அருமையான ஒன்று. அதில் ஒரு வகையான உணர்வு எழுச்சி இருந்தது. அதை அதிகம் காட்டிக்கொள்ளாமல் பேசவேண்டும் என்று முயன்றாலும்கூட அது தெரியவருகிறது. அந்த ஆழமான உணர்ச்சியை ஓர் எழுத்தாளர் மேடையில் பேசும்போது அரிதாகத்தான் காணமுடியும். இங்கே பார்வையாளர்கள் இல்லை. உங்கள் அறை. உங்கள் காமிரா. அனேகமாக நீங்கள் மட்டும்தான் இருக்க வாய்ப்பு. ஆகவே அவை மிக அந்தரங்கமான உரையாடலகா இருக்கின்றன.

அரு. ராஜேஷ்குமார் 

முந்தைய கட்டுரைதத்துவம் கற்றல்