அன்புள்ள je,
இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கும் விவாதங்களில் ஒரே சமயம் தீவிரமான உணர்வுடன் நீங்கள் ஈடுபடுகிறீர்கள் .அதே சமயம் அதற்கு மிக விரிவான தத்துவார்த்தமானதும் நடைமுறை சார்ந்ததுமான விளக்கங்களையும் அளிக்கிறீர்கள். இந்த இரண்டு முனைச் செயல்பாடுதான் உங்கள் பணிகளை தீவிரமாக ஆக்குவது என்று நினைக்கிறேன் .உணர்ச்சிகரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய இடங்களில் தீவிரமான உணர்ச்சிகளை ஆற்றும்போது பல சமயம் அதற்கு நாம் தக்கபூர்வமான விளக்கங்கள் அளிக்க முடியாமல் போவதை நான் என் வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஆனால் என்னென்ன காரணங்களால் இந்த செயல்கள் செய்யப்படுகின்றன, அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும், என்னென்ன திட்டங்கள் என்பதை தொடர்ந்து நீங்கள் விளக்கிக் கொண்டே வருகிறீர்கள். எல்லாவற்றையும் ஒரு உள்ளுணர்வு சார்ந்துதான் முடிவெடுக்கிறீர்கள் என்றும் ஆனால் வலுவான தர்க்கம் உங்கள் கூடவே வந்து கொண்டிருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது. வாழ்த்துக்கள்.
ரா.மகேந்திரன்








