அன்புள்ள ஜெயமோகன்,
உங்களுடைய கடவுள் மறுப்பாளர் பற்றிய காணொளியை பார்த்தேன். கடவுளை மறப்பது என்பது இளமையில் நான் நான் என்று நம் ஆணவம் எழுந்திருக்கும் காலகட்டத்தில் நிக்ழ்கிறது. இந்த உலகம் நம்மை மீறிய பல்வேறு சக்திகளால் ஆனது என்றும் நம்முடைய சொந்த புத்தியையும் சத்தியையும் வைத்து அதை முழுக்க ஜெயித்து விட முடியாது என்றும் தெரியும்போது கடவுளிடம் நான் செல்கிறோம். இது எப்போதும் திரும்பத் திரும்ப இது தான் நடந்து கொண்டிருக்கிறது.
அப்படி திரும்பிச் செல்லும்போது வழக்கமான கடவுளை விட இன்னும் தர்க்க பூர்வமான ஒரு மேலான கடவுள் உருவகத்தை அடைவது என்பதுதான் இன்று ஒரு அறிவார்ந்த செயலாக் இருக்கிறது. கடவுள் என்று சொல்லவேண்டாம், பிரபஞ்ச விசை என்றோ பிரபஞ்ச நெறி என்றோ சொல்லலாம். அதைத்தான் இன்று த்த்துவம் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி அளிக்கும் தத்துவ சிந்தனை என்பது இந்தியாவில் அறவே கிடையாது. கடவுள் வழிபாடு, கடவுள் மறுப்பு இரண்டுமே முட்டாள்தனமான நம்பிக்கை சார்ந்ததாக தான் இங்கே இருக்கின்றன. தர்க்கபூர்வமான கடவுள் நம்பிக்கை இல்லை. தர்க்கபூர்வமான கடவுள் மறுப்பும் இல்லை. இதுதான் யதார்த்தம்’
தம்பி ராஜேந்திரன்










