
அன்புள்ள ஜெ
இஸ்லாம் பற்றிய அறியாமை நமது சூழலில் மிகப்பெரிய அளவிலே இருக்கிறது. அரசியல் சார்ந்து இஸ்லாம் பற்றிய காழ்ப்பு கட்டமைக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் இஸ்லாமியர்கள் தங்களைத் தொடர்ந்து தனிமைப்படுத்திக் கொண்டு தங்களை ஒரு எதிர் மனநிலை நோக்கிக் கொண்டு சென்றபடியும் இருக்கிறார்கள்.
இச்சூழலில் இஸ்லாமின் மெய்ஞானத்தை அனைவருக்கும் அறிமுகம செய்யும் வகுப்புகள் மிக முக்கியமானவை. நீங்கள் அந்த குறிப்பில் சொன்னது போல இஸ்லாம் சூஃபி மரபு என்பது இந்திய மெய்யான மரபில் அனைத்து தரப்புகளுடனும் நுணுக்கமாக கலந்துள்ளது. நம் ஆலய வழிபாட்டிலேயே கூட அதன் பெரும் பங்களிப்பு உண்டு.இஸ்லாமிய சூபி ஞானிகளை அறியாமல் இருப்பது என்பது ஆன்மீகமாகவே ஒரு பெரிய இழப்புதான்.
இந்த வகுப்புகள் எத்தனை பேரால் கலந்து கொண்டு ஆதரிக்கப்படுகிறது நீங்கள் அளிக்கும் ஒரு செய்தி என்று நினைக்கிறேன். உங்கள் வகுப்புகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணா











