ஓவியம், தன்னைக் கண்டடைதல்

டியர் ஜெ சார்,

முதலில் இரு ஆசிரியருக்கும் நன்றியும் வணக்கமும். சென்ற வாரம் ஓவிய பயிற்சி முகாமில் சேர்ந்தேன். எனது முதல் ஓவிய பயிற்சி வகுப்பு என்பதால் மணி அண்ணா அனுப்பிய தேவையான மெட்டீரியல்ஸ் எல்லாம் தேடித் தேடி வாங்கிவிட்டேன். நான் எங்கேயும் இவ்வளவு விரைவாக கிளம்பியதே இல்லை. வியாழன் காலையில் இருந்தே ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டேன். டவுன்லோடு செய்த ஆப்ஸ், மெட்டீரியல்ஸ், போன் மற்றும் டேப்இல் சார்ஜ் ஏத்தி வியாழன் மதியமே தயாராகிவிட்டேன். அன்று இரவு இங்கு ஈரோட்டில் சரியான கோடை மழை. தூங்க மனதே இல்லை. ஆனால் என் உள்ளம் தூங்கு அப்பதான் நாளைக்கு வகுப்பை கவனிக்க முடியும் என்று ஆறு மணிநேரம் தூங்கினேன். வெள்ளிமலைக்கு போகும் வழியில் தாமரை பூக்கள் வருக வருக என்று அழைத்தது போல இருந்தது. புகைப்படம் எடுத்துக்கொண்டு கிளம்பினால் வழியில் எக்கச்சக்கமான பலாப்பழம், பச்சை பூக்கள் கொத்துகொத்தாக இருப்பது போல இருந்தது. வெள்ளிமலை வருவதற்குள் பாரி கீதா மேம் லலிதா மேம் பத்தி ரெண்டு வரி அறிமுகம் கொடுத்தான், தலையை ஆட்டிக் கொண்டேன்.

முதல் வகுப்பு லலிதா மேம்அவர்களை பற்றி சிறிய அறிமுகம் கொடுத்தார்கள். அது ரொம்ப பெரிய பயணம் என்றே சொல்லலாம். வகுப்புக்கு போகும் முன் குரு வணக்கம் சொன்னோம், “சரஸ்வதி நமஸ்துப்யம்

Oplus_131106

நல்லா இருக்கோ இல்லையோ அது நெக்ஸ்ட், பிராக்டீஸ் எடுத்துட்டே இருக்குறது முக்கியம் என்று ஆரம்பித்தார்கள். நிறைய பேர் உள்ளதால் இரு அணிகளாக பிரித்து வகுப்பை ஆரம்பித்தார். பேசிக் முறை என்பது மிகவும் முக்கியம் என்றார். எனக்கு சற்று புதிதாக இருந்தது இதற்கு முன்னர் நான் பேசிக் என்பதை ஃபாலோ செய்தது இல்லை. சற்று சிரமமாக  இருந்தது, பதட்டமும் சேர்ந்து கொண்டது. என்னால் என்னையே நம்ப முடியவில்லை, ஒரு கோடுகூட ஒழுங்காக வரவில்லை. மதியம் அதே வகுப்பு தொடர்ந்தது. ஓவியம் முடித்து விட்டால் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். நானோ

அப்பதான் தொடங்கினேன் இன்னும் பதட்டம் ஏறிக்கொண்டே போனது.

லலிதா மம் அருகில் வந்து ஒன்றும் அவசரம் இல்லை நிறைய பொறுமை உங்களிடம் இருக்கிறது சற்று நேரம் எடுத்துக்கொண்டு சொல்லுங்கள் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம் என்றார். அதன் பிறகுதான் ஒரு நிலைக்கு வந்தேன். என்னுடையது தான் கடைசி புகைப்படம்.

அடுத்த வகுப்பு கீதா மேம் அவர்களுடையது  மோஸ்ட்லி டிஸ்கஷன் என்றே சொல்லலாம். கீதா மேம் இதையெமல்லாம் நான் செய்த போஸ்டர் ஏதேனும் குறை இருந்தாலும் அல்லது சஜஷன் கூட கொடுக்கலாம் என்றார்.

மாலை இடைவேளையில் எனது சிறந்த மூன்று ட்ராயிங் பிக்சர்ஸ் எடுத்துக்கொண்டு சிறு தயக்கத்துடனே லலிதா மேம் அறைக்கு சென்றேன். அந்த மூன்றில் ஒன்று வெள்ளிமலையில் அமர்ந்து நான் வரைந்த கிருஷ்ணன் ராதை படம். அப்படம் எனக்கு மறக்க முடியாத ஒன்று. இதை பலமுறை உங்களிடம் சொல்லனும் காட்டனும்னு நினைச்சிருக்கேன். Something is there in Nithyavanam si

லலிது சிரித்து முகத்துடன் வாங்க வந்து உட்காருங்க ரஞ்சினி என்றார், நான் மொபைலில் உள்ள வரைந்த ஓவியங்கள் காட்டினேன் ஏதேனும் பிழை இருந்தால் சொல்லுங்க என்றேன். பார்த்துவிட்டு மிகவும் நன்றாக உள்ளது என்று சொன்னார். சற்று மகிழ்ச்சி அடைந்தேன். ஓரிரு கரெக்ஷன் சொன்னார் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன்.

மீண்டும் கீது மேம் வகுப்பு தொடங்கியது. பேசிக் ரூல்ஸ் வைத்து ஒரு ஆக்டிவிட்டி. அதற்கு வெள்ளிமலை சுற்றியே எல்லாரும் புகைப்படங்கள் எடுத்து வந்தோம். செய்ததை காட்டினோம். அதை போன் ஆப்பில் எவ்வாறு அமைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்கள். அதை வைத்தே அடுத்தநாள் விளம்பரம் ஒன்றை செய்து வருமாறு சொன்னார்கள்.

அடுத்த நாள் மீண்டும் லலிது மேம் கிளாஸ் ஆரம்பித்தது. இதில் கட்டிடம் டிராயிங் பார்க்க கடினமாக இருந்தாலும் மிகவும் சுலபம். நேரம் எடுத்துக்கொண்டு எனக்கு பிடிக்கும் வரை செய்யலாம் என்று எண்ணினேன்.

லலிது மாம் அருகில் வந்து ஒன்றும் அவரசரம் இல்லை, நேரம் எடுத்துக்கோங்க. முடிச்சு கூட போட்டோ எடுத்து அனுப்புங்க என்று சொன்னார் மிகவும் மகிழ்ச்சி. போவதற்குள் அதனை முடிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் உறுதியாக பதிந்தது. அதற்குப்பிறகு டெமோ வாட்டர் கலர் கிளாஸ் என்று அமைத்தார். அதில் மிக அருகில் நின்று நான் அவருடைய கை எப்படி போகிறது என்று மட்டுமே கவனித்தேன், மூச்சு விட்டேனா என்று கூட தெரியவில்லை. அன்று இரவு எனக்கு ஒரு கேள்வி உங்களுக்கு வரையும் போது யாராவது தொந்தரவு செஞ்சா எப்படி சமாளிப்பீங்க கோபம் வருமா? என்னை யாராவது தொந்தரவு செஞ்சா கோபம் எங்கிருந்து வரும் என்று தெரியாது சில சமயம் எனக்கு என் மேல கோபம் வரும் யாரிடமும் பேச மாட்டேன், தூக்கம் வராது சாப்பிடணும்னு எண்ணமும் வராது இது எப்படி மேம் சரி பண்றது என்று கேட்டேன். அதுக்கு அவங்க ஒரு ஆர்ட்டிஸ்ட்னா இதெல்லாம் வரும். பழகப் பழக உங்களுக்கும் சரி ஆயிடும், எனக்கும் கோபம் வரும். இது வந்து நார்மலான நிலைதான் ஒரு  ஆர்ட்டிஸ்டுக்கு என்றார்.

மாலை கீது மாம் கிளாஸ் ஃபான்ட் அனாடமி முழுக்கவும் ஆர்வமாக இருந்தது. அதில் ஒரு ஆக்டிவிட்டி என்னவென்றால் போனில் நமது கையெழுத்து அல்லது புது ஃபான்ட் உருவாக்க வேண்டும். ஒருவேளை என் கையெழுத்து ஒரு பாண்ட் ஆக மாறாதா என்ற ஆசை மனதில் எழுந்தது, இன்னொரு புறம் சிரிப்பாகவும் இருந்தது. அதற்கு ஒரு பெயர் வைக்க வேண்டும் நானும் அலைஸ் என்று வைத்தேன்.

அடுத்தது போஸ்டரில் எவ்வாறு எழுத்துக்கள் வரிகள் வண்ணங்கள் வைக்க வேண்டும் என்று விரிவாக சொன்னார், அவர்களுடைய போஸ்டர் வைத்தே விரிவாக சொன்னார். அதில் கம்பராமாயணம் போஸ்டர் அருமையாக இருந்தது. அதில் வரிகள் அதற்கேற்ப படங்கள் பேக்ரவுண்ட் கலர் மற்றும் அந்த பேக்ரவுண்ட் பார்ப்பதற்கு  ஓலைச்சுவடியை நினைவு படுத்தியது. அதில் அவரே அந்த வரிகளை படிப்பது போல இருந்தது.

ஒன்னே ஒன்னு சார், லலிது மேம் வகுப்பில் பெரியவர்கள் குழந்தைகளாகவும் கீது மேம் வகுப்பில் குழந்தைகள் பெரியவர்களாகவும் எனக்கு தெரிஞ்சாங்க. ஏன்னா போன் ஆப் யூஸ் பன்றதெல்லாம் குழைந்தைங்க தான் பெரியவங்களுக்கு சொல்லி கொடுத்தாங்க.

அன்று இரவு வேகமாக இரவு உணவை உண்டு யாரிடமும் சொல்லாமல் எனது கலர் பையை எடுத்துக்கொண்டு மீட்டிங் ஹால் சென்று விட்டேன். அந்த பில்டிங் படத்தை முடிக்க வேண்டும் அதுவும் அந்த இரவுக்குள் முடிக்க வேண்டும். அன்று இரவு மீட்டிங் ஹாலில் நானும் என் பில்டிங் படமும் மட்டுமே பேசிக் கொண்டோம். மிகவும் அமைதியான சூழ்நிலை அந்த இரவு எனக்கு துணையாக இருந்தது. முடித்த பின்னர் தூங்கச் செல்வோம் என்று கிட்டத்தட்ட மணி இரண்டு வரை வரைந்தேன். திரும்பி வரும் வழியில் யானை வந்தால் என்ன செய்வது! வந்தால் பார்த்துக் கொள்வோம் எப்படியோ பில்டிங் படத்தை முடித்து விட்டோம் நடப்பது நடக்கட்டும் என்று வேகமாக நடை எடுத்து ரூமுக்கு வந்தேன். எப்படியோ பாரிக்கு தெரிந்து விட்டது, திட்டினான் ஏன் சொல்லவில்லை என்று. சொன்னால் விட்டிருக்க மாட்டாய் நானும் முடித்திருக்க மாட்டேன் திரும்பி உன்னை நான் திட்ட ஆரம்பிப்பேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.

அடுத்த நாள் ஞாயிறு காலை 7 மணிக்கு கிளாஸ் அதுவும் கீது மாம் கிளாஸ் அதில் ஒரு புகைப்படம் எடுத்து அதற்கு போஸ்டர், வரிகள் அல்லது இரண்டு வரியில் ஒரு கதையை பற்றி சொல்ல சொல்லும் வகையில் போஸ்டர் உருவாக்க வேண்டும். கீது மேம் 11 மணிக்குள் கிளம்ப வேண்டும் என்றதும் கஷ்டமாக இருந்தது. அவரிடம் போய் குழந்தை போல கொஞ்ச நேரம் இருங்க என்று சொன்னேன். அவரும் சிரித்துக் கொண்டு எனக்கும் ஆசைதான் ஆனால் வீடு திரும்ப வேண்டுமே என்றார். என்னிடம் உங்கள் திறமை நன்றாக உள்ளது முயற்சி செய்து கொண்டே இருங்க ரொம்ப பர்ஃபெக்ட்டா செய்யணும்னு நினைக்கிறீங்க.. அது நல்லதுதான். அவர் பின்னாடியே நடை எடுத்தேன். இன்னும் ஒரு முறை இருங்க என்று சொல்ல முயற்சி செய்தேன் ஆனால் அது நடக்காத ஒன்று. அதனால் அவரிடம் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன் அதிலாவது பார்க்கலாம் அல்லவா என்று

Breakfast முடித்ததும் லலிது மேம் கிளாஸ் அதும் அதில் கோயில் வரைய வேண்டும். எனக்கோ பார்த்த கோவில் எல்லாம் ஒரு முறை வந்து சென்றது. அதுவும் ஹொய்சாள கோயில்கள். ஆரம்பித்தேன் வரைய அதற்குள் ஸ்லாம் புக் ஒன்று வந்தது திரும்பிப் பார்த்தால் ஒவ்வொருவரும் வீடு திரும்பவதற்கு தயார் செய்து கொண்டிருந்தனர். ஒருபுறம் லலிது மேமும் ஒவ்வொருவரிடமிருந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அந்த ஸ்லாம்புக்கில் என்ன எழுவது என்று கூட மனதில் வரவில்லை. கையெழுத்தோ எங்கெங்கோ போகிறது எனது வாழ்க்கையில் இப்படி ஒரு கையெழுத்தை எழுதுனதே இல்லை. ஏன் ஆக்சுவலி என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட யோசிச்சு எழுதினேன். கண்டிப்பா அதுல பிழை இருக்கும் அதற்கு லலிதா மேம் மன்னிக்கணும். என்ன எழுதினேன் என்று கூட என்னால திரும்பி பார்க்க முடியல எல்லாரும் கிளம்புறாங்க, அது மட்டும் தான் மனசுல இருந்துச்சு. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல என்ற எண்ணம் மனசுல வந்து வந்து போச்சு. ஆனா என்னால சொல்ல முடியல. எப்படியோ பில்டிங் படத்தை முடிச்சிட்டு புகைப்படம் எடுத்துக்கிட்டேன். அது போதும். லலிது மேம் கூட சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கிட்டேன். அந்த பில்டிங் படத்தை பார்த்துட்டு நிறைய பேர் நல்லா இருக்கு நல்லா பண்ணி இருக்கீங்க என்று சொன்னாங்க. நான் என்ன சொல்வது என்று கூட தெரியாம சிரிச்சிட்டு தலையாட்டினேன். தேங்க்யூ என்று சொல்லணும் ரஞ்சனி என்று என் அடி மனம் ரிமைண்டர் கொடுத்தது.

மதிய உணவின் போது எல்லோரும் அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார்கள். அதை என்னால் பார்க்க முடியவில்லையா என்று தெரியல. ரூம்ல போய் ஒளிஞ்சிகிட்டேன். லலிது மேம் திரும்பி வந்தாங்க அப்பயும் ஒரு புகைப்படம் எடுத்துக்கிட்டேன். ரொம்ப சந்தோஷம் மிஸ் யூ மேம் என்று சொன்னேன். அதுக்கு அவங்க சென்னைக்கு வாங்க கண்டிப்பா வாங்க நான் நிஜமா தான் சொல்றேன்னு சொன்னாங்க. சிரிச்சிட்டே அங்கயும் வந்து உங்கள தொந்தரவு பண்ணுவேன்னு சொன்னேன். லலிது மேம் ஒரு குழந்தை கிருஷ்ணன் படம் வரைந்து லைப்ரரி ரூமுக்கு முன்னாடி வச்சிருந்தாங்க. அது ஜாஜா சார் சொன்ன வைணவ பாடல் ஒன்றை வைத்து வரைஞ்சதா சொன்னாங்க, அப்போ என் அக்கா பையன் தான் ஞாபகத்துக்கு வந்தான் ஒரு சிரிப்பு சிரிச்சுகிட்டேன் எனக்குள்ள

நன்றி சார்,

ரஞ்சனி அரசி

முந்தைய கட்டுரைகலை என்னும் விடுதலை.