சலிப்பில் இருந்து செயலின்மைக்கு…

அன்புள்ள ஆ,

உங்கள் கடிதம் பார்த்தேன்.

இதில் உள்ள உணர்வு நிலைகள் மற்றும் சிக்கல்களைப் பற்றி உண்மையில் நேரில் நபர்களை பார்க்காமல் அறுதியாக எதுவும் முடிவு எடுக்க முடியாது. பொதுவாக மிதமிஞ்சிய வேலைச்சுமையும் பயனற்ற வேலையில் அதன் நீண்டகாலம் ஈடுபடுவதும் அளிக்கும் சோர்வு சட்டென்று கடும் உளச்சோர்வாக ஆகலாம். வேலையிலிருந்து விலகுவது, சம்பந்தமில்லாமல் எதையாவது செய்ய முனைவது, மிகையான ஏதவாது கற்பனைகளை உருவாக்கி அங்கே செல்லவிருப்பதாக சொல்வது, பொய்யான நம்பிக்கைகளை உருவாக்கிக்கொள்வது எல்லாம் அதன் வெளிப்பாடுகள்.

உங்கள் கணவரின் இயல்புகளைப் பற்றி பார்க்கும் போது அவருக்கு உளச்ச்சோர்வுநோய் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக தெரிகின்றனஅந்த வாய்ப்பு உடையவர்கள் எல்லா வழக்கமான செயல்களையும் ஒதுக்குவார்கள்செய்ய எண்ணினாலும் செய்யமுடியாமலிருப்பார்கள்எதற்கும் நேரடியாக பதில் சொல்ல மாட்டார்கள்பிறரைச் சார்ந்து இருப்பார்கள்ஆனால் தனியாக இருக்கவும் விரும்புவார்கள்அவர்களால் தொடர்ச்சியாக எதையும் செய்ய முடியாதுஉதிரி உதிரியாக பொழுதுபோக்கும் செயல்களை மட்டுமே செய்வார்கள்அவர்களுக்கு உரியதாகவே  சமூக வலைத்தளங்களும் அதிலுள்ள ரீல்ஸ் போன்றவைவும் உள்ளனசமூக வலைத்தள ஈடுபாடு என்பது ஒரு வகையான மனச்சோர்வின் வெளிப்பாடுதான்.

மனச்சோர்வு உடையவர்களிடம் விரிவாக விவாதிப்பதில் பொருள் இல்லை.  அவரிடமிருக்கும் செயலின்மையைஎந்த வகையிலும்ம் நாம் சொற்கள் வழியாக ஊக்குவிக்க முடியாது.  அதற்கு  தொடக்க நிலையில் வழிகாட்டுனர்கள் தேவை,  பயிற்சிகள் தேவைஓரளவுக்கு மருத்துவ உதவியும்  தேவையாக இருக்கலாம்.  ஆகவே இப்போது அவருடைய உளைச்சோர்வை ஒரு நோய் போல எடுத்துக் கொள்வதுதான் சரியாக இருக்கும்.  அந் நோய்க்கு என்ன செய்வது என்று யோசிக்கலாம்.  ஒன்று அவர்  ஒரு தரமான உளவியல் நிபுணரை அணுக வேண்டும்.  அவர் அடைந்திருக்கின்ற நிலையை எப்படி மாற்றிக்கொள்வதுஅதற்கு குறைந்தபட்ச மருத்துவ உதவி என்ன தேவைப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளலாம்.

அதன்பிறகு அவர் நாங்கள் நடத்தும் யோக அல்லது தியான வகுப்புகளை சார்ந்த ஆசிரியர்களிடம் தொடர்பு கொள்ளலாம்அவர்கள் பயிற்சிகளை அளிப்பதுடன் தனிப்பட்ட முறையில் வழிகாட்டுதல்களையும் அளிப்பதுண்டுஅது உதவியாக இருக்கலாம்.  இந்நிலையில் நீங்கள் இதை பெரும் கொந்தளிப்போடும் சீற்றத்துடன் அணுகக்கூடாது.ஓர் உளச்சிக்கலை கையாளுவது போன்ற பொறுமையுடனும் சற்று விலக்கத்துடன் ஈடுபடுவதே சரியாக இருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅரசியலின்மை, அரசியல் கடத்தல்…