மேட்ரிக்ஸ் x உண்மை.

ஜெ,

சமூக வலைத்தளங்களில் உண்மைகளை அறிய முடியுமா என்பது ஒரு முக்கியமான கேள்விதான். சமூக வலைத் தளங்களில் முக்கியமான சிக்கல் இரண்டு. ஒன்று அளவுக்கு அதிமகான content. இன்னொன்று நமக்கு எது பிடிக்குமோ அதை மட்டுமே நமக்கு கொண்டு வந்து சேர்க்கும் அதன் logarithm .இரண்டுமே நம்மை சிக்க வைப்பவை

அதிகமான தகவல்கள் வரும்போது நாம் அதில் நமக்கு எது பிடிக்குமோ,  எது நாம் ஏற்கனவே நினைத்திருப்பதன் தொடர்ச்சியோ அதை மட்டும்தான் தேர்ந்தெடுப்போம். அப்படி ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டால் அதை மட்டும் தான் சமூக வலைத்தளம் நமக்குக் காட்டும்.  நாம் வேறு வழி இல்லாமல் நம் சொந்தமூச்சையே மறுபடியும் சுவாசித்துக் கொண்டிருப்போம்.

இன்று செயற்கை நுண்ணறிவும் அதே இடத்திற்கு வந்து சேர்ந்துள்ளது. செயற்கை நுண்ணறிவு ஒரு தகவலை நமக்கு காட்டுகிறது. நாம் அதை மேற்கோள்காட்டுகிறோம். செயற்கைநுண்ணறிவு அதை அதிகாரப்பூர்வமாக எடுத்துக் கொண்டு மறுபடியும் காட்ட ஆரம்பிக்கிறது.  ஒரு கட்டத்தில் செயற்கை நுண்ணறிவு காட்டுவது மட்டுமே உண்மை என்று ஆகிவிடும்.

நாம் ஜெமினியிடம் தமிழகத்தை உருவாக்கியவர்கள் யார் என்று கேட்டால் அது  பெரியார், மு.கருணாநிதி என்று காட்டலாம். ஏனென்றால் அது திமுக அணி உருவாக்கும் பொய். அதன் எண்ணிக்கையினால் அதை செயற்கை நுண்ணறிவு உண்மை என்று காட்டும். செயற்கைநுண்ணறிவு இன்று மிகப்பெரிய ஒரு பொய் வலையை உருவாக்கும் எந்திரமாக மாறிவிட்டிருக்கிறது.

மேட்ரிக்ஸ் திரைப்படத்தில் வரும் ஒரு மாய உலகத்தை இன்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது செயற்கை நுண்ணறிவு. அதை எப்படி கையாள்வது என்று அறிஞர்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள் இதற்கு எதிராக சிறு சிறு knowledge pools உருவாக்குவதுதான் ஒரே வழி என்று சொல்லப்படுகிறது. அதற்குள்  அறிஞர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அது peer circle ஆக இருக்கும். அந்த வகை அறிஞர் குழுவுக்குள் மட்டும் தான் இனிமேல் உண்மைகள் பேசப்படும். அது அந்த அறிஞர் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருக்கும். அதற்கு அப்பால் வெளியே இயந்திரங்கள் உருவாக்கும் பொய்யின் ஒரு மகத்தான உலகம் இருக்கும், அப்படியே இது மேட்ரிக்ஸ் இன் உலகம்தான்.

மேட்ரிக்ஸ் படத்தில் உண்மை அறிந்தவர்கள், அதாவது நாலெட்ஜ் பூல்கள் மண்ணுக்கு அடியில் புதைந்து ஒளிந்து சிறு சிறு சமூகங்களாக இருந்து கொண்டு மேலே இருந்து கொண்டிருக்கும் எந்திரங்களின் பொய் உலகத்துடன் போரிடுவதாக சித்தரித்திருப்பார்கள். அதுவே இனிமேல் வர போகிறது. உங்கள் தளமும் கூட அப்படிப்பட்ட ஒரு சிறு வட்டம் என்றுதான் தோன்றுகிறது. அது மண்ணுக்கு அடியில் தலைமறைவாக தான் இருக்க முடியும். வெளியே இருக்கும் பொய்யின் பெரிய உலகத்துடன் அது மோதிக் கொண்டே தான் இருக்க முடியும்.

சிவ. அருண்குமார்.

 

முந்தைய கட்டுரைநம் உடல், நம் வாழ்க்கைமுறை- ஓர் அறிமுகப்பயிற்சி