சூஃபி வகுப்புகள்- கடிதம்.

நிகழ்வில் கலந்து கொண்டேன் . மிக சிறப்பாக இருந்தது . நிஷா மன்சூர் அவர்களை மிக பிடித்தது . எனக்கு முன்பு இஸ்லாம் சார்ந்து இருந்த சில எதிர் மறை எண்ணங்கள் மாறின , நிறைய புரிதல்கள் கிடைத்தது . முன்பு ஏன் இருந்து அளவு நபி மீது இஸ்லாமியர்கள் பற்று கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றும் , அது ஏன் என இந்த வகுப்பில் உணர முடிந்தது . சூபி மரபு பற்றி ,அதன் வரலாறு , முக்கியமான சூபிகள், இஸ்லாமிய வரலாறுகலிபாக்கள் பற்றி என நிறைய விசயங்கள் தெரிந்து கொண்டேன் . சூபி மரபு மீது மிகுந்த ஆர்வம் உருவானது

முக்கியமாக மன்சூர் அவர்களுக்கு வகுப்புக்கு நேரம் போத வில்லை அந்த அளவு அளித்து கொண்டிருந்தார் . முதல்நாள் இரவு 10 மணி வரை வகுப்பு இருந்தது . எனக்கு நபியில் இருந்து இஸ்லாம் பரவிய வரலாறு , அதற்கு அடுத்த கலிபாக்கள் ஆட்சி நடத்திய விதம் எல்லாம் பல திறப்புகளை அளித்தது . உமர் கலீபா பெரும் நாவலில் வரும் கதாநாயகன் போல காட்சி அளித்தார்

சூபி மரபு சார்ந்து முகைதீன் தொடங்கி இங்கு இருக்கும் பீர் முகமது அப்பா வரை பல சூபிகள் பற்றிய ,அவர்கள் மகத்துவம் பற்றி நிறைய அறிந்து கொண்டேன்

மன்சூர் அவர்கள் சூபி பாரம்பரிய மரபில் இருந்து வந்தவர் என்பதால் அவர் எனக்கு ஒரு சூபி மரபின் பிரதிநிதியாக தெரிந்தார் . அழகான சிரிப்பு , வெளிப்படை தன்மை , நிதானம் , என மிக கவர்ந்தார் . மிக நன்றாக இஸ்லாமிய பாடல்கள் பாடினார் . எனக்கு இங்கு வந்த பிறகுதான் கர்நாடக சங்கீதத்தில் எல்லாம் இஸ்லாமிய பாடல்கள் உண்டு என்பதே தெரிந்தது . முக்கியமாக அவர் பாடகிய மற்றும் அவர் காட்டிய பிறர் பாடிய இஸ்லாமிய பாடல்கள் எல்லாம் கேட்க மிக இனிமையாக இருந்தன.

சூபி தியான அடுக்குகள் ( முறைகள் ) பற்றி அறிந்த போது பின்பற்றி பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் பற்றியும் நிறைய பேசினார் . சீறா புராணம் , குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் தொடங்கி அவரது தாத்தா அக்கிம் அயூப் (சூபி) பாடல்கள் வரை பேசினார் . அவரது தாத்தா பாடல்கள் வித்தியாசமாக நாட்டுப்புற தன்மையில் இருந்தது . ஊர் பெயர்கள் வரிசையாக வரும் , ஆனால் அது குறியீட்டு ரீதியாக அந்த ஊர் பெயரில் வேறு அர்த்தங்கள் ( உடல் அங்கங்கள் பெயர்கள் ) இருக்கும் . அவர் தாத்தா இயல்பு பற்றி , அவர் சிரிக்கும் விதம் , ஒவ்வொன்றையும் ரசித்து மகிழும் விதம் என நிறைய பேசினார் . உண்மையில் அவர் உடல் வழியாக அவர் தாத்தா தெரிந்தார் . சதக்கதுல்லா அப்பா , பீர்முகமது இருவரும் இடையே நடந்த உரையாடல் , அவுரங்க சீப் மற்றும் சதக்கதுல்லா அப்பா இருவரிடயிலான நட்பு ,அந்த துவங்கிய சுவாரஸ்யமான நிகழ்வு பற்றி பேசினார்

எனக்கு சீறா புராணம்  பாடல்கள் சார்ந்து ஆர்வம் ஏற்பட்டது . அவர் முன்வைத்த பாடல் மற்றும் ஒலிக்க செய்த பாடல்கள் பிடித்தன . தனியாக மூன்று நாள் வகுப்பு என சீறா புராணம் பாடல்களுக்கு மட்டும் என ஒரு நடந்தால் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது

நாராயண குரு மரபு மற்றும் இந்த சூபி மரபில் இருந்த முக்கிய வித்தியாசம் இங்கு சூபிஞானிகள் அதிசிய நிகழ்வுகள் தோற்றுவிப்பவர்களாகவும் இருந்தனர் . நாராயண குரு மரபில் இந்த அம்சம் இல்லைஇந்த அம்சம் பற்றியும் பேசினார்சியாசன்னி பிரிவுகள் உருவான காரணங்கள் ,அதன் பின்னணி பற்றியும் கூறினார்

எனக்கு பெயர்கள் மனதில் வைக்க கடினமாக இருந்தது , அடுதடுத்த வகுப்புகள் மற்றும் இந்த வகுப்பு சார்ந்து மேலதிகமாக தேடி படிக்கும் போது இந்த சிக்கல் மறைந்து விடும் என்று நினைக்கிறேன். . 

 

முந்தைய கட்டுரைஉறவுகளின் நிறைவின்மை – கடிதம்.