அன்புள்ள ஜெ.
‘திரை ரசனை பயிற்சி முகாம்‘ அறிவிப்பே என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆவலுடன் கலந்து கொண்டேன். இப்படியொரு வகுப்பு ஏற்படுத்தியமைக்கு மிக்க நன்றி!
‘ரத்தசாட்சி‘ எனக்கு மிகவும் பிடித்த படமாதலால் இயக்குநர்ரஃபீக் இஸ்மாயில் அவர்களை சந்திக்கவும் ஆர்வமாக இருந்தேன்.
இயக்குநர் ரஃபீக் அவர்கள் தொடக்க உரையிலேயே விழிப்படையச் செய்துவிட்டார். அதுவரை கலைப்படங்களிலும் வசனங்களை மட்டுமே கவனித்து வந்திருந்த எனக்கு ஒரு புதிய கோணம் பிடிபட்டது. சினிமாவை பார்ப்பதுமட்டுமல்ல கவனிக்கவும் வேண்டும் என அறிந்தேன். காட்சி அமைப்புகளை விளங்கிக்கொள்ளும் வழிகளையும் விளக்கினார்.
அஜிதன் அவர்கள் நிகழ்த்திய ‘சினிமா வரலாறு‘ பகுதி சுவாரஸ்யமாகவும், மதிப்புமிக்கவையாகவும் இருந்தது.கலைத்துவமிக்க திரைப்படங்களையும், இயக்குநர்களையும் தொகுத்து அறிமுகப்படுத்தினார். குறிப்பாக காட்சியமைப்பில் உள்ள கலையம்சங்களை கண்டுணரும்விதங்களை இருவருமே விளக்கினார்கள்.
அங்கு திரையிட்ட படங்களில், சில காட்சிகளில் இருந்த நுணுக்கங்களை விளக்கியபோது பிரமிப்பாக இருந்தது.இது போன்ற பயிற்சி முகாம் திரும்பத்திரும்ப நிகழ வேண்டுமென விரும்புகிறேன்.
வகுப்பாசிரியர்கள் ரஃபீக் இஸ்மாயீல், அஜிதன் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி!
அ. அந்தோணிராஜ்
சென்னை.