பயிற்சியும் இடமும்

வணக்கம்.

வாசிப்புப் பயிற்சிக்கு வந்திருந்தேன். மலைப்பாதையில் பாறைகள் சரியும் இடம்யானைகள் கடக்கும் இடம் போன்ற சாலையோர அறிவிப்புகள் ஒரு பயத்தை அதன் தொடர்ச்சியான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது..

சூழ்ந்திருக்கும் மலைகள் நடுவே பெரிதும் மதிக்கும் இலக்கிய எக்ஸ்பெர்ட் வகுப்பெடுக்கவாசிப்பில் இருக்கும் தடைகளை நிவர்த்தி செய்து கொண்டேன்.கொண்டு வந்திருந்த ஜர்கினுக்கு மட்டும் வேலை இல்லாமல் போய்விட்டது

இந்த உண்டுஉறைவிடப் பயிற்சி இனி வாசிக்கப் போவதற்கு விமான எரிபொருளாய் அமையும்.வாழ்வில் எது ஒன்றும் காரணமின்றி அமைவதில்லை.அப்படியே இப்பயிற்சியைப் பார்க்கிறேன்.வாசிப்பிற்காக மட்டுமின்றிஆயுள் பயணத்தில் எங்கோ முட்டிக் கொள்ளும் எங்கோ சுருண்டுக் கொள்ளும் நெருக்கடிகளுக்கும்  இந்த பயிற்சி மருந்தாகிறது. நல்லதொரு இலக்கை, துறைசார்ந்த ஒரு முடிவைவாசிப்பை இன்னும் சீரியஸாக பார்ப்பதை என தெளிவான முடிவுகளை பயிற்சியினூடேபயிற்சி முடிவில் எடுக்க முடிந்தது.

கருமமே கண்ணான அந்தியூரடிகளுக்கும் (தங்கள் மொழிசொல்லில் அடங்கா நன்றி.. இப்படியான பணிகளுக்கு இவர் போன்றவர் தங்களுக்கு  கூடுதல் ஜெயம்

முத்தரசு

அன்புள்ள முத்தரசு

ஒரு கல்விஓர் இடம் என்பது என் கனவு. ஒரு குறிப்பிட்ட கல்வியை அதற்கான இடத்தில் இருந்து பிரிக்க முடியாது. அந்த இடம் அக்கல்வியை நம் ஆழுள்ளத்துக்குள் செலுத்துகிறது.

அது உங்களுக்கும் நிகழ்க

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்புப் பயிற்சி, கடிதம்
அடுத்த கட்டுரைநாத்திகத்திற்கு தத்துவம் உண்டா?