சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள்

சைவசித்தாந்த அறிமுக வகுப்புகள் மீண்டும் நிகழ்கின்றன.வணக்கத்திற்குரிய சாந்திகுமார அடிகள் வகுப்புகளை நடத்துகிறார். சைவசித்தாந்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற சாந்திகுமார அடிகள் நடத்திய சென்ற வகுப்புகள் குறித்து பெரும் உளக்கிளர்ச்சியுடன் பங்கேற்பாளர்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.

இந்திய சிந்தனையின் விரிவான வரைபடத்தை அளித்து, அதில் சைவத்தின் இடத்தை வகுத்து, அதன் ஒவ்வொரு அடிப்படைக்கொள்கையையும் நவீனகாலகட்டத்தைச் சேர்ந்தவர்களுக்காக அவர் கற்பித்த எளிமையான அறிமுகம் ஒரு மாபெரும் முன்னுதாரணம் என்றனர்.

தமிழகத்தில் சைவர்களே மிகுதி. ஆனால் சைவத்தை அறிந்தவர்கள் அவர்களில் மிகச்சிலரே. ஓர் எளிய அறிமுகமே நம் ஆலயங்களை, நம் அன்றாடச் சடங்குகளை முற்றிலும் புதிய ஒளியில் காட்டிவிடும் என்பதை கற்றவர்கள் உணரமுடியும். நம் வாழ்க்கையின் கோணமே அதனூடாக மாறிவிடும்.

இது மதக்கல்வி அல்ல. ஆசாரப்பயிற்சியும் அல்ல. இது முற்றிலும் தத்துவக் கல்வி. எந்த தத்துவத்திலும் ஈடுபாடுள்ளவர்கள் கற்கலாம். எல்லா தத்துவமரபையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் கொண்டவர்கள் பங்கேற்கலாம்.

சைவசித்தாந்தத்தை எளிய அன்றாடமொழியில், ஆனால் மேடைப்பேச்சுகளின் பாணியில் சாதாரணமாக ஆக்காமல் முறையான வகுப்புகளாகக் கற்பிக்கும் இன்னொரு இடம் இன்று இல்லை. நவீன இலக்கிய வாசிப்பும், மேலைச்சிந்தனைகளில் பயிற்சியும் உடையவர் சாந்திகுமார சுவாமிகள். அவரிடமிருந்தே இன்றைய நவீன வாசகன் சைவத்தை இனிய கற்றலனுபவமாக அடைய முடியும்

நாள் அக்டோபர் 25, 26 மற்றும் 27 (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம்

தொடர்புக்கு [email protected]

பயிற்சி வகுப்புகள் – இடமிருப்பவை

மேலைத் தத்துவ அறிமுகம்

பேராசிரியர் இரா.முரளி தமிழ்க் கல்வித்துறை உருவாக்கிய முக்கியமான தத்துவப்பேராசிரியர். இந்திய தத்துவம், மேலைத்தத்துவம் ஆகிய தளங்களில் விரிவான பயிற்சி கொண்டவர். அவருடைய சாக்ரடீஸ் ஸ்டுடியோ என்னும் யூடியுப் சானல் வெளியிட்டுள்ள தத்துவ விளக்க...

பதஞ்சலி மரபு, யோகப்பயிற்சி

https://youtu.be/r7lXysrmOJw யோக ஆசிரியர் சௌந்தர் தொடர்ச்சியாக நடத்திவரும் யோகப்பயிற்சிகள் இன்று பெரும்புகழ்பெற்றுவிட்டன. மலேசியா, ஶ்ரீலங்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தொடர்ச்சியாகச் சென்று யோக வகுப்புகளை நடத்தி வருகிறார். இவை பதஞ்சலி வடிவமைத்த முறைமை சார்ந்தவை. சத்யானந்த...

பயிற்சி வகுப்புகள் – நிறைந்துவிட்டது

பயிற்சி வகுப்புகள் – நடந்தவை

உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி 

https://youtu.be/3em-kw5ud30 உளக்குவிப்பு -தியானம் அறிமுகப்பயிற்சி  தில்லை செந்தில்பிரபு நடத்தும் உளக்குவிப்பு மற்றும் தியானப்பயிற்சிகள் பல முகாம்களாக நடைபெற்றுள்ளன. ஏராளமான பங்கேற்பாளர்கள் அவை அளித்த ஆழ்ந்த தன்னறிதலை எழுதியுள்ளனர். யோகம், தியானம் ஆகியவை சென்ற நூற்றாண்டில் அனைவருக்கும் உரியவையாக...

தமிழ் மரபிலக்கிய வாசிப்புப் பயிற்சி

  தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டும் அல்ல, தமிழினூடாக தங்கள் சமயத்தையும், வரலாற்றையும், பண்பாட்டையும் அறிந்துகொள்ள விழையும் ஒவ்வொருவரும் மரபிலக்கியம் பயின்றாகவேண்டும். இத்தனைபெரிய மரபிலக்கியம் உள்ள ஒரு மொழியில் புழங்குபவர் அதில் அறிமுகமே இல்லாமலிருப்பதென்பது...

விபாசனா, பௌத்த மெய்யியல் வகுப்புகள்

  https://youtu.be/Nl0SaqFLzvw லி கவிஞர், நாவலாசிரியர். தொழில்முறையில் அறிவியல் ஆய்வாளர். பௌத்த தியானம் மற்றும் மெய்யியலில் முறையான பயிற்சி கொண்டவர். அவர் நடத்திய பௌத்த மெய்யியல் - விபாசனா வகுப்பு பங்கேற்பாளர்களுக்கு மிகப்பெரிய தொடக்கமாக அமைந்தது...

வரவிருக்கும் நிகழ்வுகள்

இப்போதே விண்ணப்பிக்கலாம்

நவீனமருத்துவ அறிமுகம் 

மருத்துவர் மாரிராஜ் நடத்திய நவீன மருத்துவ அறிமுக வகுப்பு மிக உதவியானதாக இருந்தது என்றும், குறிப்பாக மிக எளிமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது என்றும் கடிதங்கள் வந்துகொண்டே இருந்தன.

நவீன மருத்துவம் நம் வாழ்க்கையின் அன்றாடத்துடன் தொடர்புடையது, ஆனால் அதைப்பற்றி நமக்கு பெரிதாக ஏதும் தெரியாது, நாமறிந்துள்ளவை பெரும்பாலும் செவிவழிச்செய்திகளும் கற்பனையும்தான் ஆகவேதான் போலிமருத்துவங்களுக்கு எளிதில் ஆட்படுகிறோம். முறையாக அறிந்துகொள்வது நூற்றுக்கணக்கான அன்றாடச்சிக்கல்களில் இருந்து நம்மைக் காப்பது. குறிப்பாக குழந்தைகளோ முதியோரோ நம் இல்லத்தில் இருந்தார்கள் என்றால் மிக அவசியமானது.

இது மருந்து, மற்றும் நோய்கள் பற்றிய தகவல் கல்வி அல்ல. உடல் என்னும் விந்தை செயல்படும் முறையைப்பற்றியும் அதனுடன் நாம் கொள்ளும் உறவு பற்றியும் நிகழும் வகுப்பு. நம்மைப்பற்றி நாம் கொண்டிருக்கும் பார்வையையே மாற்றியமைக்கும் கல்வி.

நாள் நவம்பர் 1,2 மற்றும் 3 (வெள்ளி சனி ஞாயிறு)

இந்திய ஆலயக்கலை அறிமுகம். தொடக்கநிலையினருக்காக 

ஜெயக்குமார் பரத்வாஜ் நடத்தும் இந்திய ஆலய- சிற்பக்கலை அறிமுக வகுப்புகள். இவை தொடக்கநிலையினருக்காக நடத்தப்படுகின்றன. ஏற்கனவே பலமுறை நிகழ்ந்தவை. இந்தியச் சிற்பக்கலையை, ஆலயக்கட்டுமானங்களை அறிந்து ரசிப்பதற்கான பயிற்சி இது

நாள் 8 9 மற்றும் 10 நவம்பர் (வெள்ளி சனி ஞாயிறு)

 

இந்திய தத்துவ அறிமுகம் ஐந்தாம் நிலை

இந்திய தத்துவ அறிமுகம் நான்காவது நிலையை ஏற்கனவே முடித்தவர்கள் மட்டும் பங்குகொள்ளலாம்.

நாள் நவம்பர் 15 16 மற்றும் 17 

இஸ்லாமிய தத்துவம் சூஃபி மரபு

நிஷா மன்ஸூர் ஏற்கனவே நடத்திய இஸ்லாமிய தத்துவம்- சூஃபி மரபு அறிமுகம் ஓர் மகத்தான அனுபவமாக அமைந்தது என்று பங்கேற்றோர் கூறினார்கள். குறிப்பாக இஸ்லாம் அல்லாதவர்களுக்கு இஸ்லாமின் வரலாறு, அதன் ஆன்மிகமையம் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. இஸ்லாமை மட்டும் அல்ல ஆன்மிகம், கலை ஆகிய அனுபவங்கலையே முற்றிலும் புதிய ஒளியில் பார்க்கச்செய்த மாபெரும் தொடக்கமாக அது அமைந்தது என்றனர்.

மீண்டும் இஸ்லாமிய- சூபி தத்துவ அமர்வுகள் நவம்பர் 22, 23 மற்றும் 24 அன்று நிகழும்.

ஆர்வமுள்ளவர்கள் இப்போதே பதிவுசெய்துகொள்ளலாம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய தத்துவ வகுப்பு – கொள்ளு நதீம்

இஸ்லாம், கடிதம்

இஸ்லாமிய அறிமுகம், கடிதம்

இஸ்லாமிய ஞானம்- கடிதம்

இஸ்லாம், சமப்பார்வையை உருவாக்கிவிட முடியுமா?

 

இடங்கள் நிறைவுற்றவை

பறவை பார்த்தல் பயிற்சி 

(இடங்கள் நிறைவுற்றன. மீண்டும் ஜனவரியில் நிகழலாம்)

 

எங்கள் தமிழ் வலைத்தளம் unifiedwisdom.guru  

Our English Website   unifiedwisdom.today 

எங்கள் யூ டியூப் சேனல் முழுமையறிவு யூடியூப்

எங்கள் முகநூல் பக்கம் முழுமையறிவு முகநூல்

எங்கள் இன்ஸ்டா பக்கம் muzumaiaivu insta

முந்தைய கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம்…
அடுத்த கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம், ஒரு பதில்…