தத்துவ வகுப்புகள் மீண்டும்

அன்புள்ள ஜெ அவர்களுக்கு,

வணக்கம் .

தங்கள் தளத்தில் பயிற்சி வகுப்புகளின் அட்டவணையை பார்த்தேன்.  அதில் நான் தேடிய  – தத்துவ வகுப்பு முதல் நிலை இல்லை.  தீவிரமாக நீங்கள் முதல் நிலை வகுப்புகள்  எடுத்துக் கொண்டிருந்த சமையத்தில் வீட்டில் என்  மகள் ஆருத்ரா கை குழந்தையாக இருந்தாள்என் அப்பாவின் உடல் நலனும் நன்றாக இல்லைமூன்று நாட்கள் வெளியே வருவது என்பது அப்பொழுது மிகவும் சிக்கலான ஒன்றாக இருந்தது.

இப்போது  சூழ்நிலைகள் ஏதுவாக இருக்கும்பொழுது நீங்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வகுப்புகள் நடத்துகுறீர்கள்வரும்நாட்களில் முதல் நிலை  வகுப்புகள் நடத்தும் எண்ணம் தங்களுக்கு உண்டா ?

நன்றி

பவித்ரா சக்திவேல்

கோவை 

 

அன்புள்ள பவித்ரா

இந்த தளத்தின் வாசகர்களுக்கு இரண்டு ஆண்டுகளாகவே தத்துவ வகுப்புகள் அறிமுகமாகியுள்ளனஏறத்தாழ நூற்றைம்பதுபேர் தொடர்ச்சியாக பங்கெடுத்துள்ளனர்.  ஆகவே ஆர்வமுள்ள பெரும்பாலானவர்கள் ஏற்கனவே வந்துவிட்டனர் என்று தோன்றுகிறதுமீண்டும் முதல் வகுப்பு என்றால் அதற்கு வருபவர்கள் எவ்வளவுபேர் இருப்பார்கள் என்று தெரியவில்லைஒரு வகுப்புக்கு தேவையான குறைந்தபட்ச பங்கேற்பாளர்கள் இல்லை என்றால்  அதை நடத்துவது பொருளிழப்புஆகவே யோசிக்கிறோம்.

பொதுவாக இத்தகைய வகுப்புகள் ‘எப்போதுவேண்டுமென்றாலும் பங்கேற்கலாம்’ என எண்ணத்தக்கவை அல்ல.  இப்படிப்பட்ட வகுப்புகள் உண்மையில் இன்று தமிழகத்தில் எங்குமே இல்லைமரபார்ந்த அமைப்புகள் பழைய பாணியில் நடத்தும் வகுப்புகள் சில உள்ளனஅவை மூலநூல்களுக்கு பொழிப்புரை சொல்லிக் கற்பிப்பது என்னும் வழிமுறை கொண்டவைஇன்னொன்றுபாடத்திட்டமாக பயிற்றுவிக்கப்படும் முறைஅவை தகவல்களை அளிக்கின்றனஅவை இரண்டுமே இன்றைய உள்ளத்துக்கும் இளைஞர்களுக்கும் ஒத்துவருவன அல்லஆகவேதான் நவீன வாசகர்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் இப்பயிற்சிகள் தொடங்கப்பட்டனஇவற்றை தவறவிடுபவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு தமிழகத்தில் இன்று இல்லை. தத்துவம் மட்டும் அல்ல. ஓவியம், ஆலயக்கலை, சைவம், வைணவம், நவீன மருத்துவம், ஆயுர்வேதம் என நாங்கள் ஒருங்கிணைக்கும் எந்தப்பயிற்சியையும் பெற வேறொரு வாய்ப்பே எங்கும் இல்லை. 

அதை நம்மவர் உணர்ந்திருப்பதில்லை.  மிக எளிய காரணங்களுக்காக வகுப்புகளைத் தவறவிட்டுவிட்டு மீண்டும் எப்போது நிகழும் என சாதாரணமாக கேட்பவர்களே மிகுதிநம்மவரின் ஆர்வமின்மை பற்றி தெரியும். கற்கும் ஆர்வம் கொண்டவர்களுக்கு சூழலில்  ஒரு வாய்ப்புகூட இல்லாமல் போகக்கூடாது என்பதனாலேயே நாங்கள் இதை தொடங்குகிறோம். ஆனால் போதிய பங்கேற்பாளர் இல்லையேல் நடத்த முடியாதுபொருளிழப்பு உருவாகும்ஆகவே நிறுத்தப்பட்ட எந்த வகுப்பும் மீண்டும் தொடங்கப்படாது.  எங்கள் வட்டத்திற்கு வெளியே இதைக் கொண்டுசெல்லவேண்டுமா, அவ்வாறு வருபவர்களை மதிப்பிடுவது எப்படி என்று குழப்பமாக உள்ளது. அவ்வாறு வெளியே கொண்டுசென்று புதியவர்கள் வருவார்கள் என்றால் முதல் வகுப்பு மீண்டும் நடக்கலாம். ஆனால் இன்றைய சூழலில் மீண்டும் வகுப்பு நடக்குமா என சொல்ல முடியாதுபெரும்பாலும் வாய்ப்பில்லை.

தத்துவம் போன்றவை தீவிரமான மெய்யான ஆர்வம் கொண்டவர்களுக்குரியவைஆகவேதான் கல்லூரிகளில் ஆர்வமில்லாத மாணவர்களுக்கு அவற்றை கொண்டுசெல்லக் கூடாது என உறுதி கொண்டிருக்கிறோம்வேறு எந்த வேலையும் இல்லையென்றால், வேறு பொழுதுபோக்குகளுக்கு ஒதுக்கப்பட்து போக மிஞ்சிய நேரத்தில் தத்துவ   வகுப்புக்கு வரலாம் என்னும் மனநிலை கொண்டவர்கள் தத்துவத்தை கற்றுக்கொள்ள முடியாதுஅவர்களுக்குரியதல்ல தத்துவம்மன்னிக்கவும். 

ஜெ

முந்தைய கட்டுரைஆன்ம பலம், யோகம்- கடிதம்
அடுத்த கட்டுரைகண்ணனை அறிதல், கடிதம்