பிரபந்த வகுப்பு, கடிதங்கள்

அன்புள்ள ஜெ ,

சென்ற மாதம் ஆசிரியர் ராஜகோபாலன் அவர்களின் நாலாயிரதிவ்ய பிரபந்தம் வகுப்பில் கலந்து கொண்டது, மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் அளித்தது

96 வகை சிற்றிலக்கியங்கள் நம் மரபில் இருந்தாலும், சொல், பொருள், சித்தாந்தம் ஆகிய மூன்று அம்சங்கள் இருப்பவை மட்டுமே காலம் கடந்து நிற்பதை மிக அழகாக சுட்டி காண்பித்ததார். (அதிலும் சித்தாந்தத்தை கடலுக்கு அடியிலுள்ள பனிக்கட்டியாக உருவக்கப்படுத்தி, சொல்லையும், பொருளையும் tip of the iceberg-ஆக   காண்பித்தது எனக்கு பெரிய திறப்பை தந்தது).

ஒவ்வொரு ஆழ்வாரின் இயல்பையும் அடையாளப்படுத்தியது,அவர்களை நெருங்கவும், ரசிக்கவும் உதவியது (திருமிழிசையாழ்வார் = குறும்பான கிழவர்; பெரியாழ்வார் = வாஞ்சையான தந்தை….) .

கடவுளின் ஐந்து நிலைகள் (பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை), திருமாலின் நான்கு குணங்கள் (வாத்சலயம், ஸ்வாமித்துவம், சௌசீல்யம், சௌலப்யம்), நாம் கடக்க வேண்டிய மூன்று தசைகள் (சம்சாரம், சம்சார தீர்ணம், பரமபத பிராப்தி) என்று  வைணவ சித்தாந்தத்தை பற்றிய  நுட்பங்களை, பாசுர பொழிப்புரைகளுக்கிடையிடையே விளக்கி கொண்டேயிருந்தது, அத்தத்துவத்தின் அடிப்படைகளை மனதில் நன்கு பதிய செய்தது.

வைணவத்தில் பல  நுட்பங்களை விளக்கிவிட்டு, நான் கூறியுள்ளது எனது ஸ்ரீ பாஷ்யம் ஆசிரியர் ஸ்ரீ ஶ்ரீரங்க முத்து சீனிவாச ஸ்வாமியின் உரைகளில் ஒரு சதவிகிதம் கூட இல்லை என்று ஆசிரியர் ராஜகோபாலன் கூறியது, இத்தரிசனத்தின் மீது என் ஆர்வத்தை பல மடங்கு தூண்டியது.

பிரபந்த பாடல்களில் மாலோலன் அவர்களின் அபாரமான நினைவாற்றலும், உணவு வேளைகளின்போது  வைணவத்தை கலாய்த்து கொண்டேயிருந்ததீவிர சைவர்அந்தியூர் மணி அவர்களின் உபசரிப்பும், சரியாக பதில் கூறியதற்கு ஆசிரியர் பரிசாக அளித்த கருப்பட்டி மிட்டாயும்  வகுப்புகளுக்கு பெரிதும் சுவையூட்டின.

படியாக் கிடந்து உன் பவளவாய் காண்பேன்என்று குலசேகரத்தாழ்வார் கூறியதைப் போல், ‘நித்தமும் கிடக்க முடியவில்லையே, நித்ய வன பள்ளியில்என்று புலம்ப தோன்றுகிறது

இளம் தலைமுறையினர், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சாத்தியப்படுத்தியுள்ள உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.     

ராஜ்குமார்

 அடுத்த பிரபந்த வகுப்பு

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

[email protected]

முந்தைய கட்டுரைஆலயங்களில், கடிதம்
அடுத்த கட்டுரைஓர் அறிவியக்கம் உருவாவது…