செறிவான உரை, கடிதம்

அன்பு ஆசானுக்கு வணக்கம்!

         YouTube ல் தங்களது ‘செறிவான உரையின் அவசியம் என்ன? ‘ என்ற காணொளி யைப் பார்த்தேன்! தாங்கள் நடத்தி வரும் அனைத்து பயிற்சிகளுமே எடுத்துக் கொண்டு என்னை செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்! என்றாலும் ஒரு ஆசிரியையாகவும், அவ்வப்போது மேடைகளில் பேசுவதுண்டு என்பதாலும் மேடையுரைப் பயிற்சி என் முதல் தேவை ஆசானே! தயைகூர்ந்து மேடையுரைப்பயிற்சி அளித்தருள வேண்டும்!
இன்பா
அன்புள்ள இன்பா
எங்களுக்கு ஒரு நிபந்தனை உள்ளது, ஒரு நிகழ்வுக்கு குறைந்தது 20 பேர் வராவிட்டால் பொருளிழப்பு உருவாகும். 30 பேர் இருந்தால்தான் அது குறைந்தபட்ச எண்ணிக்கை. எண்ணிக்கை 20க்குக் குறைந்தால் அவ்வகுப்பை நிறுத்திவிடுவோம். சென்ற உரைப்பயிற்சியில் 20 பேர் தேறவில்லை. ஆகவே தொடரவில்லை.
பலர் இது எப்போது வேண்டுமென்றாலும் நடக்கும், வசதிப்படும்போது கலந்துகொள்ளலாம் என நினைக்கிறார்கள். நிறுத்தப்பட்ட பின் மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். எங்கள் வகுப்புகளை இன்று வேறெங்கும் எவரும் நடத்துவதில்லை, நடத்த தகுதியானவர் அதிகமில்லை என அவர்கள் உணர்வதில்லை.
மீண்டும் செப்டெம்பரில் இவ்வகுப்பு நிகழலாம்.
ஜெயமோகன்
முந்தைய கட்டுரைபாமதி
அடுத்த கட்டுரைவேதாந்தம் செயலின்மையை அளிக்குமா?