கட்டுரைகள், கடிதம்

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நானும் நலம்.

உங்கள் இன்னொரு இணையதளத்தில் வெளிவரும் படைப்புகளைப் பார்த்தேன். முதலில் ஜெயமோகன் இணையப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகள் இங்கே மறுபிரசுரம் ஆகின்றன என நினைத்தேன். ஏராளமான புதிய பதில்கள் இங்கே வெளியாகும் செய்தி இப்போதுதான் தெரிந்தது. ஆங்கில இணையப்பக்கத்தில் வெளியாகும் கட்டுரைகளும் புதியதாக எழுதியவை. ஒரே சமயம் மூன்று இதழ்களை நடத்த ஆரம்பித்திருக்கிறீர்கள் . மிகப்பெரிய வேலை. மூன்றையும் படிப்பது ஒரு பெரிய சவால். ஆனால் படித்துவிடவேண்டும் என்ற மன உறுதியுடன் இருக்கிறேன்

மதத்தை இன்று ஏன் பயிலவேண்டும்?

தியானமும் யோகமும் எவருக்காக?

ஆகிய இரு கட்டுரைகளும் மிகச்சிறப்பானவை. ரத்தினச் சுருக்கமாக ஒரு அடிப்படையான கேள்வியை விளக்குகின்றன. அவற்றை என் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தேன்.

செல்வராஜ் ராதாகிருஷ்ணன்

அன்புள்ள செல்வராஜ்,

இந்த தளம் எங்கள் நிகழ்வுகளுக்காகவும், நிகழ்வுகள் பற்றிய விவாதங்களுக்காகவும் அமைந்தது

நண்பர்கள் எங்களுக்குச் செய்யவேண்டிய முதன்மை உதவி எங்கள் கட்டுரைகளை கூடுமானவரை மற்றவர்களுக்கு அனுப்பிவைப்பதுதான்

ஜெயமோகன்

முந்தைய கட்டுரைசோதிடக்கல்வி குறித்து…
அடுத்த கட்டுரைகுருகுலக் கல்வியின் அவசியமென்ன?