எல்லா தத்துவங்களையும் ஒரே சமயம் கற்றல்…

அன்புள்ள ஜெ,

முழுமையறிவு அமைப்பில் ஒரே சமயம் பல தத்துவ வகுப்புகளும் மதக்கொள்கை வகுப்புகளும் நிகழ்கின்றன. அவை அனைத்திலும் ஒருவர் மாறி மாறிக் கலந்துகொள்வதனால் அவருடைய கவனம் சிதறிப்போக வாய்ப்புண்டா? இது என்னுடைய பிரச்சினையாகவே கேட்கிறேன். நான் தத்துவ வகுப்புகள் பயில்கையில் சைவசித்தாந்த வகுப்பில் கலந்துகொள்ளலாமா?

எஸ்

இவ்வார முழுமையறிவு வகுப்புகள்

முனைவர் அ.வே.சாந்திகுமார சுவாமிகள் நடத்தும்

சைவசித்தாந்த வகுப்புகள்

நிகழ்வு ஜூன் 7, 8 மற்றும் 09 தேதிகளில் நிகழும் (வெள்ளி சனி ஞாயிறு)

ஆர்வமிருப்பவர்கள் எழுதலாம்.தொடர்புக்கு [email protected]

அன்புள்ள நண்பருக்கு

இவ்வகுப்புகள் இதைச்சார்ந்த திட்டமிடல் கொண்டவை. தன்போக்கில் வெவ்வேறு இடங்களில் நிகழும் வகுப்புகளை நீங்கள் தெரிவுசெய்தால் நீங்கள் சொல்லும் அந்தச் சிக்கல் உருவாக வாய்ப்புண்டு. உதாரணமாக, ஒரு தத்துவ வகுப்புடன் ஒரு தாந்த்ரீக வகுப்பையும் ஒரு பக்தி- வழிபாடு நிகழ்வையும் ஒரேசமயம் நடத்தினால் அவை உங்கள் அகத்தில் ஒன்றுடனொன்று எதிர்கொண்டு குழப்பநிலையை உருவாக்கும்.

ஆனால் இங்கே எல்லாமே தத்துவ வகுப்புகள்தான். ஒரு மரபின் தத்துவம் இன்னொன்றில் இருந்து மாறுபடலாம், மறுத்துச் செல்லலாம். ஆனால் வேதாந்த நோக்கில் அவை ஒன்றையொன்று நிறைவுசெய்து ஒரே உண்மையை செறிவாக்கவே செய்கின்றன. நாங்கள் இங்கே மாறுபட்ட தரப்புகளை கற்பிக்க ஏற்பாடு செய்கிறோமே ஒழிய கடுமையான மதமறுப்புகள், மதப்பூசல்களுக்கு இடமளிப்பதில்லை. ஒரு தத்துவம் இன்னொன்றை தத்துவார்த்தமாக மறுப்பதைமட்டுமே முன்வைப்போம், காழ்ப்பு அல்லது எள்ளலின் மொழி முழுமையாகவே தவிர்க்கப்படுகிறது. அந்தச் சமநிலையும் முழுமையான நேர்நிலைநோக்கும் கொண்ட அறிஞர்களை மட்டுமே தெரிவுசெய்கிறோம்

ஜெ

இஸ்லாமிய மெய்யியல் வகுப்புகள்

ஜூலை 12 13 மற்றும் 14 (வெள்ளி மாலை முதல் ஞாயிறு மதியம் வரை)

கிறிஸ்தவ மெய்யியல் வகுப்புகள்

ஜூன்21 22 மற்றும் 23 ஆம் தேதிகளில் இவ்வகுப்புகள் நிகழும்

வைணவ வகுப்புகள்

நாள் ஜூன் 28, 29 மற்றும் 30 (வெள்ளி சனி ஞாயிறு)

முந்தைய கட்டுரைமாடனும் காடனும் இந்து தெய்வங்களா?
அடுத்த கட்டுரைதேடுபவர்களின் எண்ணிக்கை