தேடுபவர்களின் எண்ணிக்கை

அன்புள்ள ஜெ

முழுமையறிவு பற்றிய என்னுடைய மனப்பதிவுகளையும், இந்த வகுப்புகளையும் நான் பலரிடம் சொல்லி வருகிறேன். காணொளிகளையும் அனுப்பி வருகிறேன். ஆனால் மிகப்பெரும்பாலானவர்கள் அக்கறையே காட்டுவதில்லை. ஆனால் இவர்கள்தான் தொடர்ச்சியாக அறிவுச்சார்பற்ற விஷயங்களைப் பற்றிச் சலிப்பும் அடைந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்த முரண்பாடு ஆச்சரியமளிக்கிறது.

சாந்தகுமார்

அன்புள்ள சாந்தகுமார்

’இந்துக்களிடம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்று கேட்டால் ‘கடவுளைக் காண்பது’ என யோசிக்காமல் பதில் சொல்வார்கள். ஆனால் மறுகணமே உலகியலில் மூழ்குவார்கள்’ – இது பலராலும் மேற்கோள் காட்டப்படும் ஒரு வரி.

இது நம் இயல்பு. நாம் அறிவார்ந்த, அரிய மக்களாக நம்மை காட்டிக்கொள்வோம். சலிப்பு, விமர்சனம் ஆகியவற்றை முன்வைப்போம். ஆனால் எந்த தீவிரமான செயல்களிலும் ஈடுபட மாட்டோம்.

ஓர் உதாரணம் சொல்கிறேன். பரத்வாஜ் ரங்கனின் காணொளியில் இந்நிகழ்வுகள் பற்றி நான் சொல்கிறேன். அதற்கு அரைலட்சம் பேர் வந்து பார்த்திருக்கிறார்கள். அவர்களில் அதிகபட்சம் 200 பேர்தான் இக்காணொளிகளை வந்து பார்த்திருக்கிறார்கள். நானும் அதற்குமேல் எதிர்பார்க்கவில்லை.

ஆகவே அந்த பொதுப்பேச்சுப் பசப்பல்களை நம்பவேண்டாம். ஆயிரத்தில், பல்லாயிரத்தில் ஒருவருக்கே அடிப்படையான தேடல் இருக்க முடியும். எஞ்சியவர்கள் மிக எளிமையான பிழைப்புவாதிகள் மட்டுமே. அது அப்படித்தான் என்றும் இருந்து வருகிறது. கொஞ்சம் அறிவுப்பாவலா தேவைப்படுவது இன்றைய சூழல் அளிக்கும் கட்டாயத்தால்தான்

ஜெ

முழுமையறிவு காணொளிகள் 

முந்தைய கட்டுரைஎல்லா தத்துவங்களையும் ஒரே சமயம் கற்றல்…
அடுத்த கட்டுரையோகம் மதம் சார்ந்ததா?