யோகமும் என் குடும்பமும் – சர்வா

அன்புள்ள ஜெ,

‘எழுதுக அதுவே அதன் இரகசியம்’ என்று நீங்கள் தொகுத்த வாசகர்களின் கேள்வி பதில் அளித்த ‘எழுதுக’ என்ற  நூலுலிருந்து என் தைரியத்தை ஒரு வழியாக வர செய்து நான் எழுதும் முதல் கடிதம்.

அறிமுகம்

நான் ஒரு சிங்கப்பூர் நிரந்தரவாசி. ஆகஸ்ட் 2016ல் சிங்கப்பூரில் நடந்த ஆசிரியார்களுக்கான Ministry Of Education (MOE) ஏற்பாடு செய்திருந்த நீங்கள் நடத்திய இரண்டு நாள் பயிற்சியை video coverage செய்வதற்க்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி தான் உங்கள் அறிமுகம் கிடைத்து.  அதன் பிறகு அறம், காடு, முதற்கனல் படித்தேன். youtube video அவ்வபோது பார்ப்பதுண்டு.

கொரொனாவால் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும்  பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். வேலைகள் குறைந்து விட்டன. வெட்டியாக food courtல் உட்காருவது, நடைக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்தன. ஆனால் என் மனைவிக்கு அடித்து பாருங்கள் அதிருஷ்டம் – சம்பள உயர்வுதான், Flexibility Working Hours (FWH) தான்.

அப்போது எனக்கு ஒரு பொறி தட்டியது. ஏன் நான் தற்காலிகமாக ஒரு break எடுத்துக்கொண்டு இந்தியா செல்லக்கூடாது என்ற யோசனையை மனைவியிடம் முன் வைத்தேன். தயக்கதிற்க்கு பிறகு (என்ன சொன்னாலும் நீ கேட்க போறதில்ல என்ற பாணியில்) ஒப்புக்கொண்டாள்.  பிறகு என்ன, சென்னை வந்து இறங்கியவுடன் பைக்கை எடுத்துக்கொண்டு இந்தியப் பயணம் தொடங்கியது. கோவையிலிருந்து லே-லாடாக் பயணம். இரண்டு மாத பயணதிற்க்குப் பிறகு ஒரு பித்து பிடித்த நிலை.

ஏழு வருடங்களுக்கு பிறகு மீண்டும் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எள்ளளவும் நினைத்ததில்லை.

வாசிப்புக்கு பின்னால் ice bergயை போல இவ்வளவு விஷயம்  மறைந்திருக்கிறாதா என்று நினைக்கும் போது பிரமிப்பாக இருந்தது. வாசிப்பது ஒரு பொழுது போக்கு அல்ல, வாசிப்பு என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது என்பதை அறிந்தேன். உங்கள் இணையத்தளத்தில் வரும் கடிதம், கட்டுரை, விவாதம் மூலம் இலக்கியம் பற்றிய ஒரளவுக்கு புரிதலை அடைந்தேன்.

உஙகள் youtube videoவை தொடர்ந்து பார்க்க ஆரம்பித்தேன். உங்கள் இணையத்தலத்தில் வரும் கடிதம் கட்டுரைகளை படிக்க ஆரம்பித்தேன். இப்போது தொடர்ந்து 6 மாத காலமாக படித்து வருகிறேன். உங்கள் இணையத்தில் வரும் கடிதங்களை படித்து வரும் போது தான் பலர் பயிற்சி முகாமில் கிடைத்த அனுபவத்தை பற்றி எழுதிய கடிதத்தை படிக்க வாய்ப்புக்கிடைத்தது. நானும் பயிற்சி முகாமில் பங்கு எடுக்க வேண்டும் என்ற பெரும் தாகம் உருவாயிற்று. என் முதல் பயணம், மார்ச்சியில் 15-17, 2024 திரு சௌந்தர் நடத்திய யோக பயிற்சி முகாம்.

முதல் பயணம்

முதல் பயணம் நித்யவனதிற்கு, தூக்கம் வரவில்லை. இணையத்தளத்தில் மழைப்பாடல் படித்துக்கொண்டுரிந்தேன். நண்பரிடம் வழி கேட்கும்போது  ஆம்பூர்-கிரிஷ்ணகிரி-மேட்டுர் வழியாக செல்லாம் என்றான். விடியற்க்காலை 3.30am bikeல் என் பயணம் ஆரம்பித்தது.

மிகவும் புழுக்கமாக இருந்தது. இலை அசையவில்லை. நாய்கள் குலைக்கும் சத்தம். வெறிசோடிய தெரு. தேநீர் அருந்திவிட்டு செல்லலாம் என்று தோன்றியது. ரெயில் கட்டமைப்பு பணி இரவில் அதிகமாக் இருப்பதால் ஆங்காகே take diversion. அதை தாண்டி சாலையின் ஒரத்தில் cycleல் tea, biscuit, bun, omlet  என்று ஒரு mini கடையே வைத்திருந்தார். ‘அண்ணே ஒரு டீ’ என்றேன். ‘ஒரு டீயா’ என்று மேலும் கீழுமாக அவரது கண்கள் என்னை scan பண்ணிக்கொண்டிருந்தது. ‘ஆமாண்ணே ஒரு டீ தான்’ என்று bike விட்டுக்கீழே இறங்கினேன்.

‘எங்கண்ண வண்டி கெள்ம்பிருச்சு’ என்றார். ‘ஈரோடு போறேண்ண’ என்று கூறிகொண்டு டீ யை உறிஞ்சினேன். சாலையில் வேலைகள்ள் நடந்து கொண்டிருந்தன. சில இளைஞர்கள் bikeல் அமர்ந்து கொண்டு டீ யை உறிஞ்சினர்.

‘எவ்வளவுண்ணே டீ’ என்றேன். ‘பத்து ரூபாய்’ என்றார். ரூபாயை கொடுத்துவிட்டு ‘சரிண்ணே கெளம்புறன்’ என்றேன். அந்த உரையாடல் சோர்வை அகற்றி உற்சாகமூட்டியது.

18மணி நேர bike rideக்கு பிறகு நித்யவனத்திற்க்கு வந்து சேர்ந்தேன். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. 15 வருட இடைவெளிக்கு பிறகு தென்னிந்தியப் பயணம். மனம் எதையோ நாடிச் செல்கிறது. வாழ்க்கையில் பாதியை கடந்துவிட்டாலும் ஒரு பெரிய உற்சாகம்.

யோகப் பயிற்சி முகாம்.

யோகம் பயில்வதற்க்கு முன் ஏன் யோகம் பயில வேண்டும் என்பதற்க்கான அறிமுகத்தை புரியும் வகையில் குருஜி விளக்கினார்.

ஒருவரை தொடர்ந்து யோக சாதகனாக மாற்றுவதை தவிர வேற எந்த நோக்கமும் இல்லை.

இது பத்திலிருந்து பதினைந்து பயிற்சிகள் உள்ளடக்கியது. பரபரப்பான சுழலில் இருக்கும் நமக்கு அவசியமாக செய்ய வேண்டியப் பயிற்சிகள் இவை. 45நிமிடம் முதல் 1மணி நேரம் செலவழித்தால் உடலும் உள்ளமும் ஒரு நிலை பெறும் என்பதை மிகைப்படுத்தாமல் அவசியத்தை உணர்த்தினார் சௌந்தர்ஜி.

Non traditional yoga என்றால் என்ன? ஒரு குறிப்பிட்ட பிரட்ச்சனைக்கான ஒரு setup of practice அது முதுகு வலியா இருக்கலாம் அல்லது தூக்கமின்மையா இருக்கலாம்.  நீங்க எந்த பிரட்சனை சொன்னாலும் அதுக்கு இங்கே ஒரு பயிற்சி உண்டு. இந்த பயிற்சியை youtubeல் கற்றுக்கொள்ளலாம் அல்லது அருகில் உள்ள yoga studioவில் கற்றுக்கொள்ளலாம்.  கற்றப்பிறகு ஒரு மூன்று மாதம் அல்லது 4 மாதம் முயற்சி பண்ணி பார்க்கலாம். இதில் குணமாகும் சதவிகிதம் 50 முதல் 80 சதவிகிதம் வரை. அதனால் தான் உலகம் முழுவதும் யோகம் ரொம்ப popularஆக உள்ளது. இதில் 80 சதவிகிதம் மக்கள் பயனையடைந்து வருகின்றனர்.

மீதியுள்ள 20 சதவிகித மக்கள் செய்துவருவது traditional yoga. முழுமையான யோகம் அல்லது மரபார்ந்த யோகம் ஆகும். ஒரு பிரச்சனை அதன் தீர்வை மட்டும் சொல்லாமல் இதன் ஆரம்ப நிலை என்ன, மறுபடியும் வராமல் நாம் என்ன செய்ய வேண்டும், ஆகிய அடிப்படைகளை இது பயிற்றுவிக்கிறது. உதாரணமாக,மூட்டுவலி இருந்தால்  மூட்டு வலியின் காரணம் என்ன? அந்த காரணத்தை நீக்குவதற்க்கான பயிற்சி என்ன உள்ளது?பயிற்சியை செய்வதினால் ஏதாவது பக்கவிளைவுகள் உண்டா?மறுபடியும் மூட்டுவலி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? – என்றெல்லாம் ஆராய்கிறது

இந்த மூன்று காலமும் இணைந்து ஒரு பயிற்சி திட்டத்திற்கு  மரபார்ந்த யோகம் அல்லது மூழுமையான யோகம் என்று பெயர்.

பயிற்சியின் நோக்கம்

non traditional yogaவிலிருந்து இந்த traditional yoga  எந்த இடத்தில மாறுபடும் என்றால்  ஒருவர் கால் கை நீட்டி மூச்சி உள்ளே இழுத்தோ ஏதோ செய்துக்கொண்டுயிருப்பதுமாதிரி தெரியும். ஆனால் பயிற்சியின் நோக்கம் அது மட்டும் அல்ல.  வெறும் ஆசன பயிற்சி செய்வது மாதிரித் தெரியும் ஆனால் அவர் மனதில் ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும். உடலும் மனதும் ஒன்றை ஒன்று முழுக்க முழுக்க சார்ந்திருப்பதால்  உடல் சொல்வதை தான் மனம் கேட்கும்,  மனம் சொல்வதை தான் உடல் கேட்கும். உலகத்தில் உள்ள 10 நோய்களில் 7 முக்கியமான நோய்களுக்கு psycho schematic disorder என்று பெயர். மனதால் உடலில் உருவாகக்கூடிய நோய். இந்த யோகப்பயிற்சியின் மூலம் உடலோடு உள்ளமும் மேம்படும் என்பதை தெளிவாக விளக்கினார்.

இரணடாம் நாள், மூன்றாம் நாள் யோகப் பயிற்சி விறுவிறுப்பாகவும் நிதானமாகவும் சென்றது. பயிற்சிகளை  முழுமையாக கற்றுக்கொண்டால் மட்டும் போதாது. அதை தொடர்ந்து செய்ய வேண்டும். குருஜியின் வழிப்படி தொடர்ந்து செய்து வந்தேன். அவ்வப்போது எழும் ஐயத்திற்கு குருஜி விளக்கம் கொடுத்து ஐயத்தை நீக்கினார்.

யோகக் கொண்டாட்ட முகாம் 

மீண்டும் யோகக் கொண்டாட்டம் முகாம் (மே 17,18,19) இணையத்தலத்தில் பார்த்தேன். பதிவு செயவதற்க்கு முன் மகள் காவியாவின் அரையாண்டு விடுமுறை வந்தது. இந்தியப் பயணம் மனைவிக்கும் இருந்தது. மனைவி வனிதாவிடம் ‘என்ன யோகப் பயிற்சிக்கு செல்லலாமா என்று கேட்டேன், அவள் ‘வரதே பத்து நாள். கொஞ்சம் ஜாலி சுத்துலானும் பாத்தா ஏன் இந்த ஏற்பாடு, நீ போறதுனா போயேன், எங்களை ஏன் இழுக்குற’ என்று ஆரம்பித்தாள். ‘ஒரே ஒரு நாள் வந்து பாரு பிடிக்கலைன்னா நீ போய்டு’ என்றேன். சரி என்று அரைமனதோடு ஒப்புக்கொண்டாள். மூவருக்கும் யோகப்பயிற்சி முகாம்மிற்க்கு பதிவு செய்தேன்.

சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த அன்று இரவே அந்தியூர்க்கு பேருந்தில் பயணம். விடியகாலை 3 மணி அளவில் அந்தியூர் வந்தடைந்தோம். அந்தியூரிலிருந்து 5.20க்கு மடத்துக்கு செல்லும் பேருந்தில் பயணம். யானை ஏங்கே இருக்கும் என்று பார்த்து கொண்டே வந்தோம். மனைவி, மகள் தூங்கிகொண்டும் வேடிக்கை பார்த்துக் கொண்டும் வந்தார்கள். அவர்கள் உற்சாகமாக இருப்பதை கவனித்தேன் (அப்பாடா தப்பிச்சோம் சாமி என்று நினைத்துக்கொண்டு) மடம் வந்து சேர்ந்தோம்.

குருஜியின் தெளிவான விளக்கம், அந்தியூர் மணி அண்ணாவின் அரவணைப்பு, அம்மாவின் சமையல், பறவைகளின் சத்தம், மயில் நடனம்  என்று குடும்பமே ஐய்க்கிமாகிவிட்டார்கள். வகுப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று மனைவியின் புகழாரம் (தப்பிச்சோம்ண்டா சாமி என்று மீண்டும் பெருமூச்சு விட்டேன்)

விடைபெற்று செல்வதற்க்கு முன் அத்தாட்சியாக  குருஜியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைப் பெற்றோம்.

தேவர் மலையைத் தாண்டியதும் யானை பார்ப்பதற்கான வாய்ப்புக்கிட்டியது. கண்டதும் மகள் மகிழ்ச்சியுற்றாள்.  இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் மனைவி ‘ஒரு பெரிய குடும்பம் போல இருக்குல்ல்ல, நானும் தொடர்ந்து யோகப் பயிற்சி செய்கிறேன், அடுத்து எப்போ வரலாம் என்றாள்”. நான் புன்னகைத்தேன்.

இந்த வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

-சர்வா

முந்தைய கட்டுரைசைவசித்தாந்த வகுப்பு – கடிதம்
அடுத்த கட்டுரைமத அடிப்படைவாதம், மதச்சார்பு.