அன்புள்ள ஜெ
நீங்கள் யோகி ராம்சுரத் குமாரைச் சந்தித்துள்ளீர்களா? ஒரு நண்பர் நீங்கள் சந்தித்து உரையாடியதாகச் சொன்னார்.
அர்விந்த்
அன்புள்ள அர்விந்த்
1982ல் அவர் பிச்சைக்காரர் மட்டுமாக இருந்தபோது நானும் திருவண்ணாமலையில் சிலகாலம் பிச்சைக்காரனாக இருந்தேன். சகபிச்சைக்காரன். அப்போது பார்த்ததுண்டு.
1992ல் நான் அவரை ‘எழுத்தாளராக’ என் நண்பர் பவா செல்லத்துரையுடன் சென்று சந்தித்தேன். அந்த உரையாடலை நான் ஒரு கட்டுரையாக பதிவுசெய்துள்ளேன். முடிவின்மையில் இருந்து ஒரு பறவை (வாழ்விலே ஒருமுறை நூலில் அந்த பதிவு உள்ளது)
அதன்பின் அதைப்பற்றிய விவாதம் என் தளத்தில் நடைபெற்றுள்ளது. சில கட்டுரைகள் உள்ளன
ஜெ