ஜெ
என் மூளை ஒரு வரிக்கு அல்லது இரு வரிக்கு மேல் சிந்திக்கவே செய்ய முடியவில்லை ,என் வாழ்க்கை பெரிய பிரச்சினை ஆகிவிடுகிறது .நன் இத்தனை மேம்படுத்தவே உங்கள் தத்துவ வகுப்புக்கு வந்துகொண்டு இருக்கிறேன் (4class complated ).
எனக்கு ஒரு கட்டுரை, அல்லது நூலை எப்படி கிழேஉள்ளது போல தொகுத்துகொள்ளவேனும் என்று பயிற்சி மேற்கொள்ள விருப்பம் .
(இப்போது நமக்கு முதலில் தேவை சாராம்சப்படுத்திக் கொள்ளுதல் அல்லது சுருக்கிக்கொள்ளுதல். அதன்பின்றகே அடுத்தபடிக்குச் செல்லமுடியும். ஒரு கட்டுரை, அல்லது நூலை எப்படி பல கருத்துப் புள்ளிகளாக அணுகி, தொகுத்து, அட்டவணையிட்டு, மனவரைபடத்தை உருவாக்கிக் கொள்ளுதல், அந்த மனவரைபடத்தை எப்படி விரிவாக்கிக்கொள்ளுதல் என்பதையே கற்பிக்கவேண்டும்.)
ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் இதில் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறான் , எனக்கு முழுமையான ஒரு method Or ஒரு பயிற்சி நீங்கள் சொல்லமுடியுமா ? அத்தனை தினமும் செய்து உங்களுக்கு அனுப்புகிறேன்.
2. அருவ– நுண்வடிவ சிந்தனை பற்றியும் மேலும் தெரிந்து கொண்டு , இத்தனையும் பயிற்சி மேற்கொள்ள இருக்கிறேன் , எனக்கு முழுமையான ஒரு method Or ஒரு பயிற்சி நீங்கள் சொல்லமுடியுமா ?
(அதை நுண்சிந்தனை என்று சொல்வேன். உண்மையில் சிந்தனை என்பது அதுதான். வரும்காலத்தில் மனிதன் செய்யப்போகும் மூளையுழைப்பு என்பது அதில் மட்டுமே, எஞ்சிய அனைத்தையும் செயற்கை நுண்ணறிவே செய்யும். நமக்கு அளிக்கப்பட்டவற்றில் உள்ள தர்க்கத்தை மேற்கொண்டு முன்னெடுத்து அச்சிந்தனையை விரிவாக்குதல் (தர்க்கம்), அதைக்கொண்டு புதியவற்றை உருவாக்குதல்வா (கற்பனை) முற்றிலும் புதிய தளத்திற்கு அதில் இருந்து தாவிச்செல்லுதல் (நுண்ணுணர்வு) ஆகியவையே நமக்கு இன்று தேவையான அருவ– நுண்வடிவ சிந்தனை.)
நான் உங்கள் எழுதுக என்ற நூலையும் படித்து கொண்டு இருக்கிறேன்.
ஆதித்யா
அன்புள்ள ஆதித்யா,
நூல்கள் வழியாக வழிகளை அறிந்துகொள்ள முடியும். பலருக்கு அந்த வழிகள் தெரிந்தாலே போதுமானது. அந்த வழிகளை பயிற்சிகளாக்கி அளித்தால் மேலும் அதிகமானவர்களுக்குப் பயனளிக்கும். ஆகவேதான் வாசிப்புக்கான பயிற்சிகளை அளிக்கிறேன். அந்தப்பயிற்சிகளில் நீங்கள் பங்குகொள்லலா
ஆனால் அந்தப் பயிற்சிகூட பொதுவானதாக, அனைவருக்கும் உரியதாக மட்டுமே இருக்க முடியும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பயிற்சி அளிப்பது, அவர்களின் செயல்களை கண்காணிப்பது என்னால் இயலாது. எந்தத் தனிமனிதராலும் இயலாது. அவரவருக்கான முறைகளை அந்த பொதுப்பயிற்சியில் இருந்து அவர்களேதான் கண்டடையவேண்டும்.
அந்தப் பொதுப்பயிற்சியை தீவிரமாகச் செய்யும் ஒருவர் தனக்கான வழியைக் கண்டடைவார். அதை தொடர்ந்து செய்வது, தன்னை செலுத்திக்கொள்வது ஆகியவற்றுக்கு அவருக்கு புற உதவி தேவைப்படும் என்றால் அவர் அதே பயிற்சியை எடுத்துக்கொண்டவர்களுடனான ஓர் உரையாடலில் இருக்கலாம். அதற்கான குழுவை உருவாக்கிக் கொள்ளலாம். அது மிகுந்த பயனளிக்கும் ஒரு வழி
ஜெ