உத்திஷ்டத!

 

தங்கத்திருவோடு 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் உள்ள கருத்துக்கள், அனுபவங்கள் அல்லது வாக்கியங்கள் எங்களை அதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள படிக்கவோ தேடவோ தூண்டுகின்றன. எனக்குப் பிடித்தமான சில சொற்களில் ஒன்று ஜாக்கிரதை. தொலைபேசி/கைப்பேசியில் நெருக்கமான சில பேரிடம் பேசி முடித்தவுடன் ஜாக்கிரதை என்று சொல்லி முடிக்கும் வழக்கம் ஒவ்வொரு முறையும் எனக்கு உண்டு (TAKE CARE என்ற அர்த்தத்தில்). 

தங்கத் திருவோடு பதிவில்ஜாக்ரத என்று அதைத்தான் உபநிடதம் சொல்கிறதுஎன்று வருகிறது. எந்த உபநிடதத்தில் அப்படி உள்ளது என்று அறிய விரும்பி கூகுளில் தேடும் போது, உத்திஷ்ட ஜாக்ரத எனத் தொடங்கும் மலையாள திரைப்பட பாடல் ஒன்று ஒலி வடிவில் காட்சி இல்லாமல் யூடியூபில்  கிடைத்தது. சரசைய்யா படத்தில் வயலார் வரிகள் ஜி.தேவராஜன் இசையில்  காதல் பாடல் போல உள்ளது. நீங்களும் இதை படத்தில் அல்லது வானொலியில் கேட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். .இல்லாவிடில் கேட்டு ரசிக்கவும்.

https://youtu.be/ERYngXaPnlg

அன்புடன்,

நா.சந்திரசேகரன்   

முந்தைய கட்டுரைமதம், மரபு – கடிதம்
அடுத்த கட்டுரைபொழுதுபோக்கு எழுத்தும் இலக்கியமும்