திரும்பத் திரும்ப பொழுதுபோக்கு எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது. ஏனென்றால் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் இலக்கியத்துக்குள் நுழையவே முடியாது. இலக்கிய வாசிப்பில் உணரும் தடைகள் என புதிய வாசகர் சொல்வன அனைத்தும் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளாமையால் உருவாகின்றவைதான்.