அன்புள்ள ஜெ , அவர்களுக்கு
இந்து மதம் குறித்த தங்களது காணொளியை கண்டு அளவில்லா ஆனந்தமும் அடைந்தேன் என்றால் அது மிகையாகாது. நாம் நமது பண்பாடு ,கலாச்சாரம் குறித்த எந்தவித கேள்வியும் அதனை உணர எந்த வித முயற்சியும் எடுக்காதது மிகவும் வருத்தத்திற்குரியது.இன்று நாம் இருக்கும் இந்து மதம் என்பதற்கான தெளிவான ஒரு விளக்கம் எனக்கு கிடைத்தது. அதுவும் சாதாரண விளக்கம் அல்ல பல்வேறு புத்தகங்களை தேடினாலும் கிடைக்காத அரிய வரலாறு நீங்கள் கூறியது.
குறிப்பாக சோமாஸ்கந்தர் பற்றி நீங்கள் தெளிவுரை என்னை வியக்க வைத்தது. நெல்லையப்பர் கோவில் சந்நிதியில் அந்த சோமாஸ்கந்தர் சிலையை பல முறை தரிசித்ததுண்டு இன்று தான் அதன் தத்துவார்த்த மூலத்தை உங்கள் மூலம் கிடைக்கப்பெற்றேன். ஒவ்வொரு சிலையும் தத்துவம்தான் . தனித்துவம் அல்லது கூட்டுத்தத்துவம். மேலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலும் பின்னர் இனி வரும் காலங்களிலும் இந்த தத்துவம் மாறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.
மேலும் ஆவலுடன் உங்கள் பதிவை மேலும் எதிர்நோக்கும் ராஜாமணி .
நன்றி
ராஜாமணி