சம்ஸ்கிருதம், கடிதம்

அன்புள்ள ஜெ,

உங்கள் உரைகள் ஒவ்வொன்றும் சுருக்கமாகவும் ஆழமாகவும் அடிப்படையான கேள்விகளை எதிர்கொண்டு பதிலளிப்பவை. மழுப்பல்கள் இல்லை. எந்த நிலைபாட்டையும் மூர்க்கமாக முன்வைக்கவுமில்லை. சம்ஸ்கிருதம் பற்றிய காணொளி மிக ஆழமான ஒன்று. சம்ஸ்கிருதம் ஒரு இணைப்பு மொழி. பாலி. பிராகிருதம் போல. இப்போது ஆங்கிலம் போல. ஆங்கிலம் வழியாக வந்த எல்லா ஆதிக்கத்துக்கும் ஆங்கிலமே காரணம் என்று சொல்லமுடியுமா? அல்லது ஆங்கிலம் இதையெல்லாம் அளித்தது, ஆகவே அது ஒரு தேவபாஷை என்று சொல்லமுடியுமா? சம்ஸ்கிருதப்பெருமை, சம்ஸ்கிருத வெறுப்பு இரண்டுமே அபத்தமானவை என்பதை உங்கள் உரை காட்டியது. நன்றி

ஶ்ரீராம்

முந்தைய கட்டுரைசைவத்தை மூன்றுநாளில் கற்பதா?
அடுத்த கட்டுரைமுழுமையறிவு, கடிதம்