ஆசிரியருக்கு,
மதத்தின் தொடர்ச்சியாகவே மனிதமனம் வந்திருக்கிறது என்ற சிந்தனை சிந்திக்க வைக்கிறது. பிறமத காழ்ப்புணர்ச்சி மூலமாக மதவாதிகளை வளர்க்கிறோம் என்பதும் உண்மை.தக்கலை பீர் முகமமது அப்பாவின் சூபி பாடல்கள் மத நல்லிணக்கத்திற்கு உதாரணம். அதுபோல தொழுகைமுறை. ஏன் நாம் மதத்தில் கூறப்பட்ட நல்லவைகளை குறைத்து மதிப்பிட்டு அதில் கூறப்பட்ட மூடநம்பிக்கைகளை வைத்து போராடுகிறோம்?முடிவு, மூடத்தன்மை எல்லா மதத்திலும் வளர உதவுகிறோம்.அறிவினால் மதங்களை அறிவதை விட்டுவிட்டு உணர்வுகளால் அதை பார்க்கும் போது உண்மைத்தன்மை இல்லாமல் போய்விடும். மதநல்லிணக்கம் என்பதே மதத்தை புரிந்து கொள்ளத்தானே தவிர மேலும் அதை சிக்கலுக்குள் ஆக்குவது அல்ல.எல்லாமதங்களும் கடவுள் ஒருவரே என்ற ஒரே கருத்தை கூறினாலும் நம்முடைய காழ்ப்புணர்ச்சி உள்ளிருந்து அதை தடுத்துவிடுகிறது.மத அனுஷ்டானங்களின் தாத்பரியம் என்ன என்பதை அறிவுபூர்வமாக அறிந்து கொள்ளும் வரை மதத்தை
அணுகும் முறையும் சிக்கலாகத்தான் இருக்கும்.இரண்டாவதாக மதத்தில் என்ன நம்பிக்கை கூறப்பட்டிருக்கிறது என்று அறிவைதை விட்டுவிட்டு யார் கூறினார்கள் என்பதை காழ்ப்புணர்ச்சி மற்றும் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுவும் ,மதத்தில் உள்ளதை உள்ளபடி அறிய இயலாமல் போகும்.எல்லோருக்கும் ஒன்றானதாக மதம் மாற வேண்டும்.(மதம்மாறுவது Conversion அல்ல).முழுமையறிவு அதை செயல் படுத்த முடியும் காலதாமதம் ஆனால் கூட.
தா.சிதம்பரம்.