ஆசிரியருக்கு,
தாங்கள் குறிப்பிடும் கருத்துக்களை மானுடவியலாளர்கள் Artifacts and Menti Facts என்று கூறுவார்கள்.வட இந்தியாவில் நான் பணியாற்றிய போது தாங்கள் குறிப்பிடும் பொம்மை வழிபாட்டை கண்டிருக்கிறேன்.தமிழகத்தில் சைவ ஆகமப்படி கட்டப்பட்ட கோவில்களில் சைதன்யம் உண்டு.சைவ சித்தாத்த கருத்துக்களை அடிக்கடி நேரடியாகவும்,புத்தகங்கள் வாயிலாகவும் அறிந்து வருகிறேன். உருவ வழிபாடு மிக அவசியமான ஒன்று.
அண்மையில் திருநெல்வேலி ஹரிகேசவநல்லூர்கோவிலுக்கு சென்றிருந்தேன்.மிகப்பழமையான சிவன்கோவில். வரலாறு சைவசமயம் ஆகமம்.ஷேஷ்டதேவி வழிபாடு, குபேரன் வழிபாடு உண்டு.இவையெல்லாம் வரலாற்று தொடர்பு உடையது.Artifacts உருவ,சிற்ப புராதன வழிபாடு மூலமாகத்தான் நாம் Menti facts என்ற சமய உட்கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.விளக்கம் கொடுக்காமல் விவேகம் வருவதில்லை.பஜனை,சம்பிரதாயங்கள் பக்தியின் படிநிலைகளே.சிவஞானபோதத்தின் கருத்துகளை ஒரு சைவ இலக்கியமாக பார்ப்பதை விடுத்து அது ஒரு அறிவு புத்தகமாக பார்க்க வேண்டும்
சைவ ஆதினங்கள் நடத்தும் வகுப்புகளை கவனித்து வருகிறேன்.மிகக்குறைந்த மாணவர்கள். தேர்வுக்காக சான்றிதழ்களுக்காக படிப்பவர்கள் அதிகம்.சரியான சைவசித்தாந்த கருத்துக்களை சொல்லிக் கொடுப்பவர்கள் குறைவு.ஆறுமுக நாவலரின் சைவசித்தாந்த பாலபாடம் ஒன்று போதும் சிவபுராணத்தின் அறிவு விளக்கம்,திருவாசகத்தின் அறிவுரை, போன்றவற்றை இன்றைய நடையில் எடுத்துச்சொல்ல ஆசிரியர்கள் தேவை.மாணவர்களும் கூடத்தான்.நோட்ஸ் கொடுத்து மனப்பாடம் செய்வதல்ல சைவசித்தாந்தம்.அறிவை அறியும் அறிவே உண்மையறிவு மற்றதெல்லாம் பின்னறிவு என்பது ஞாபகம் வருகிறது.சைவசித்தாந்த வகுப்புகள் தொடர வேண்டும்.
தா.சிதம்பரம்